TamilSaaga

பாலியல் தொழிலுக்கு முகவராக இருந்த 58 வயது நபர் – 15 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவு

சிங்கப்பூரில் ஒன்பது தாய்லாந்து பாலியல் தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் ஏஜெண்டாக செயல்பட்டு, அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்த சிங்கப்பூரருக்கு கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 11) அன்று 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 58 வயதான டான் பூன் கெங் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

மதர்ஷிப் வெளியிட்ட தகவலின்படி நீதிமன்ற ஆவணங்கள், கைது செய்யப்பட்ட டான் பூன் கெங் மீது ஒன்பது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அதில் எட்டு குற்றச்சாட்டுக்கள் விபச்சாரத்துடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எட்டு குற்றச்சாட்டுகளில், நான்கு பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்ததும் அடங்கும்.

மேலும் அவரது விபச்சார தொழிலை அதிகரிக்க, டான் பின்னர் கெய்லாங்கில் ஒரு லாட்ஜிங் வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கு பாலியல் தொழிலாளர்கள் தங்கள் சேவைகளை அங்கிருந்து வழங்குமாறு அவர் கூறினார். சில காலம் கழித்து, அவர் கோல்டன் மைல் வளாகத்தில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த நான்குபாலியல் தொழிலாளர்களை ஆகஸ்ட் 2018ல் பணிக்கு அமர்த்தியுள்ளார்.

இந்நிலையில் ஒன்பது தாய்லாந்து பாலியல் தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் ஏஜெண்டாக செயல்பட்டு வந்ததற்கு கைது செய்யப்பட்ட அவருக்கு 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts