TamilSaaga

சிங்கப்பூர் லயாங் அவென்யூவில் சாலை விபத்து – மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த நபர் மரணம்

சிங்கப்பூரில் இன்று வியாழக்கிழமை (ஜூலை 29) காலை லொயாங் அவென்யூ மற்றும் பாசிர் ரிஸ் டிரைவ் 3 சந்திப்பில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை 8.20 மணியளவில் இந்த விபத்து குறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் அனுப்பப்பட்டது. சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு ஒருவர் மரணமடைந்து இருந்ததை கண்டனர்.

இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகின்றது. இந்த விபத்து குறித்து மேலும் சில தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CNA செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி மற்றும் புகைப்படத்தின் அடிப்படையில், விபத்து நடந்த இடத்தின் புகைப்படத்தில், சாலை சந்திப்பில் பாதசாரிகள் கடக்கும் இடத்தின் அருகே லாரிக்கு பின்னால் அமைக்கப்பட்ட போலீஸ் கூடாரத்தைக் காணமுடிகிறது. கூடாரத்திற்கு அடுத்த சாலையில் ஒரு மோட்டார் சைக்கிள் கிடப்பதைக் காணமுடிகிறது.

இந்த விபத்தை தொடர்ந்து சாலையின் மூன்று வழித்தடங்கள் மூடப்பட்டு, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கடந்து செல்லும் வாகனங்களை சீர்செய்வதை காணமுடிந்தது.

Related posts