TamilSaaga

சிங்கப்பூரில் பிறந்து 6 நாளே ஆன குழந்தை.. இப்படியொரு கொடுமை வரக்கூடாது! ஆனால்.. NENS இருக்கும் போது என்ன கவலை!

“Bubble Boy Disease”னு அழைக்கப்படுற SCID (Severe Combined Immunodeficiency) என்கிற மரபணு கோளாறு, உலகம் முழுக்க 50,000 குழந்தைகளில் ஒரு குழந்தையை பாதிக்கிற அரிய ஆபத்தான நோய். இந்த நோய், குழந்தைகளுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை முற்றிலும் இல்லாம செய்யுது, இதனால சாதாரண ஜலதோஷம் கூட உயிருக்கு ஆபத்தாக மாறிடும். ஆனா, சிங்கப்பூரில் உள்ள ஆரம்பக் கண்டறிதல் திட்டமான “நேஷனல் எக்ஸ்பாண்டட் நியூபார்ன் ஸ்க்ரீனிங்” (NENS) மூலமா, இந்த நோயை பிறந்தவுடனே கண்டறிஞ்சு, உயிரைக் காப்பாத்த முடியுது.

SCID என்பது ஒரு மரபணு கோளாறு, இதனால உடலில் நோய் எதிர்ப்பு செல்களான T-செல்கள் உருவாகாம போயிடுது. இதனால, குழந்தைகள் பிறக்கும்போது ஆரோக்கியமா தெரிஞ்சாலும், சாதாரண தொற்று நோய்கள் கூட உயிருக்கு ஆபத்தாக மாறுது. இந்த நோய், 1971-ல அமெரிக்காவில் பிறந்த டேவிட் வெட்டர் என்பவரால உலக அளவில் பிரபலமானது. டேவிட், இந்த நோயால பாதிக்கப்பட்டு, முழு வாழ்க்கையையும் ஒரு பிளாஸ்டிக் உறையில் (bubble) வாழ்ந்ததால, இது “பப்பிள் பாய் நோய்”னு அழைக்கப்பட்டது. அப்போ, இந்த நோய்க்கு ஒரே சிகிச்சை, பொருத்தமான எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைதான், ஆனா டேவிட் குடும்பத்தில் பொருத்தமான டோனர் இல்லாததால, 1984-ல, ஒரு புதிய மஜ்ஜை மாற்று முறையை முயற்சி செய்யும்போது, எப்ஸ்டீன்-பார் வைரஸ் தொற்று காரணமா லிம்ஃபோமா புற்றுநோய் வந்து இறந்தார்.

இந்த நோய், உலகம் முழுக்க 50,000 குழந்தைகளில் ஒரு குழந்தையை பாதிக்குது, சிங்கப்பூரில் ஒவ்வொரு இரண்டு வருஷத்துக்கு ஒரு குழந்தை இந்த நோயோட பிறக்குது. இதை ஆரம்பத்திலேயே கண்டறியலைனா, குழந்தைகள் தொற்று நோய்களால உயிரிழக்க வாய்ப்பு அதிகம். ஆனா, இப்போ சிங்கப்பூரில் உள்ள NENS திட்டம், இந்த நோயை பிறந்தவுடனே கண்டறிஞ்சு, சிகிச்சை மூலமா உயிரைக் காப்பாத்துது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மாபெரும் கொண்டாட்டம் களைகட்டுகிறத! MWC ஏற்பாடு

எப்படி இது உயிரைக் காக்குது?

சிங்கப்பூரில் 2006-ல ஆரம்பிச்ச NENS திட்டம், பிறந்த குழந்தைகளுக்கு மரபணு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்களை கண்டறிய உதவுது. 2019-ல இந்த திட்டம் விரிவாக்கப்பட்டு, SCID மற்றும் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் மாதிரியான 5 தீவிர நோய்களையும் சோதிக்க ஆரம்பிச்சாங்க. இந்த திட்டத்தின் மூலமா, பிறந்த 24-72 மணி நேரத்துக்குள்ள, குழந்தையோட குதிகால் குத்தி ஒரு சின்ன ரத்த மாதிரி எடுக்கப்படுது. இந்த ரத்தத்தில் T-செல் ரிசெப்டர் எக்ஸிஷன் சர்க்கிள்ஸ் (Trecs) என்கிற டிஎன்ஏ துண்டுகளை சோதிச்சு, நோய் எதிர்ப்பு சக்தி சரியா வேலை செய்யுதா இல்லையானு பார்க்கிறாங்க. Trecs குறைவா இருந்தா, குழந்தைக்கு மேற்கொண்டு சோதனைகள் செய்யப்படுது.

2019-ல இருந்து, இந்த திட்டத்தின் மூலமா சிங்கப்பூரில் 1,78,000 குழந்தைகள் சோதிக்கப்பட்டு, இரண்டு குழந்தைகளுக்கு SCID இருக்குனு கண்டறியப்பட்டிருக்கு. இதுல ஒரு குழந்தை, மன்னத் சிங், பிறந்த 6 நாளில் இந்த நோய் கண்டறியப்பட்டு, சிங்கப்பூரில் முதல் முறையா பிறப்புக்கு முன்னாடி எந்த அறிகுறியும் இல்லாமல் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பெற்று, இப்போ 19 மாதங்களா ஆரோக்கியமா இருக்கிறார.

எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை

SCID-க்கு ஒரே நிரந்தர சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை. இதுல, ஆரோக்கியமான ஒரு டோனரோட எலும்பு மஜ்ஜையில் இருந்து ஸ்டெம் செல்கள் எடுக்கப்பட்டு, குழந்தையோட உடலில் செலுத்தப்படுது. இந்த ஸ்டெம் செல்கள், நோய் எதிர்ப்பு செல்களை உருவாக்கி, குழந்தையோட நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டெடுக்குது.

சிங்கப்பூரின் புதிய நகரத் திட்டம் 2025.. “மாஸ்டர் பிளான்” ரெடி! ஜூன் 25-க்கு தயாரா இருங்க! நேரில் செல்வோம்!

சிங்கப்பூரில், இந்த சிகிச்சை KKH மருத்துவமனையில் மிகவும் துல்லியமா செய்யப்படுது. மன்னத் சிங்கோட தாய், டோனரா இருந்து, எலும்பு மஜ்ஜையை கொடுத்து, குழந்தையோட உயிரைக் காப்பாத்தினாங்க. இந்த சிகிச்சைக்கு முன்னாடி, 7 நாள் கீமோதெரபி கொடுக்கப்பட்டு, குழந்தையோட உடலில் உள்ள தேவையில்லாத செல்கள் அழிக்கப்படுது. பிறகு, டோனர் ஸ்டெம் செல்கள் செலுத்தப்பட்டு, அவை உடலில் வேலை செய்ய ஆரம்பிக்குது. இந்த முறை, சிங்கப்பூரில் பிறந்த மன்னத் சிங்கோட வாழ்க்கையையே தற்போது மாற்றியிருக்கு.

சிங்கப்பூரில், 2024-ல KKH மருத்துவமனையில் 100% புதிதாக பிறந்த குழந்தைகள் இந்த NENS திட்டத்தின் கீழ் சோதிக்கப்பட்டிருக்காங்க, மொத்த நாட்டிலும் 96% குழந்தைகள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்காங்க.

இந்த மாதிரி முன்னேற்றங்கள், மருத்துவ உலகத்தோட மகத்துவத்தை காட்டுறது மட்டுமல்ல, ஒவ்வொரு குழந்தையோட எதிர்காலத்தையும் பிரகாசமாக்கியிருக்கு. சிங்கப்பூரில் இப்படியொரு திட்டமும், அதில் இப்படியொரு வசதியும் இருக்குன்னு தெரிஞ்சிக்கோங்க.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts