TamilSaaga

முதன்முறையாக ஒலிம்பிக்கில் அறிமுகமாகும் 4 வீரர்கள் யார்? – சிங்கப்பூர் பாராலிம்பிக் கவுன்சில் தகவல்

கடந்த ஆண்டு நடைபெற்று இருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டியானது கொரோனா சூழல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு தற்போது ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5 வரை டோக்கியோவில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் சிங்கப்பூரை சேர்ந்த 4 வீரர்கள் முதன்முறையாக சிங்கப்பூரை பிரதிநிதித்துவம் செய்ய களம் காண்கிறார்கள் என சிங்கப்பூர் பாராலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. பங்குபெறும் 10 பேரில் 4 பேருக்கு இந்த ஒலிம்பிக் அறிமுக போட்டியாக அமைந்துள்ளது.

பவர் லிப்டிங் போட்டியில் 45 கிலோ பெண்களுக்கான பிரிவில் நூர் ஐனி போட்டியிடிகிறார். அதே சமயம் 32 கி.மீ ட்ரையல் சைக்கிள் போட்டியில் டீ அவர்கள் தனது துணை போட்டியாளர் அங் கீ மெங் உடன் போட்டியில் களம் காண்கிறார்.

நீச்சல் வீரர் தோ (Toh) 100 மீட்டர் BackStroke போட்டியில் சிங்கப்பூர் சார்பில் போட்டியிடுகிறார். அவருடைய சக துணை போட்டியாளர் 100 Butterfly போட்டியில் பங்கேற்கிறார்.

இவர்களை தவிற மற்ற தடகள வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு,
ஆர்ச்சர் நுர் சையதியா அலிம், முகமது திராய் நூர்தீன் (குண்டு எறிதல்), லாரண்டியா டேன், கெம்மா ரோஸ், மாக்சிமிலியன் டேன் செரன் மற்றும் யிப் பின் சியூ (நீச்சல்) ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

சிங்கப்பூருக்காக Power Lift போட்டியில் பங்கேற்கும் முதல் பெண்மணி நூர் ஐனி என்றும், டீ மற்றும் அங் சிங்கப்பூரின் முதல் Tandem Cycling போட்டியாளர்கள் என்றும் சிங்கப்பூர் தேசிய பாராலிம்பிக் கவுன்சில் கூறியுள்ளது.

Related posts