கடந்த 2015ம் ஆண்டு மியான்மரை நாட்டை சேர்ந்த பியாங் நகெய் டோன் என்ற பெண், காயத்திரி முருகையன் என்ற பெண்ணின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். 2016ஆம் ஆண்டு ஜீலை மாதம் 26ம் தேதியன்று அந்த 24 வயது மதிக்கத்தக்க மியான்மர் நாட்டு பணிப்பெண்ணை காயத்திரியும் அவரது தாயாரும் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நடந்த விசாரணையில் சென்ற ஆண்டு காயத்திரி முருகையன் மீது கொலை செய்தல், உணவு வழங்காமல் பட்டிணி போட்டு காயப்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும் தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து இந்த கொலை சம்பவத்துக்காக நீதிமன்றம் விசாரணை நடத்தி அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதற்காக காயத்திரி முருகையானுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் தண்டனை அளிக்கும்போது காயத்திரியின் மனநலம் பாதிப்புபை கருத்தில் கொண்டு ஆயுள் தண்டனை வழங்குவது முறையாக இருக்காது என்று எண்ணி அவருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மனநலம் தொடர்புடைய சிகிச்சைகளில் கயாத்திரிக்கு நல்ல முன்னேற்றம் காணப்படுவதால் மீண்டும் பொதுமக்களுக்கு காயத்திரியால் ஆபத்து ஏற்படாது என்று நீதிமன்றத்தில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் காயத்திரி மட்டும் இல்லாமல் அவரது தாயார் மற்றும் கணவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.