சிங்கப்பூரில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலை இடங்களில் நடைபெறும் கவனக் குறைவு காரணமாக உயிரிழக்கும் சம்பவம் நாம் அடிக்கடி கேள்விப்படுவதுண்டு. அவ்வகையில், அவ்வாறு நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு சிங்கப்பூர் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சிங்கப்பூரில் கடந்த மாதம் மூன்று வெவ்வேறு பணியிடங்களில், பணிபுரிந்த தொழிலாளிகள் உயிரிழந்தனர்.
எனவே சிங்கப்பூரின் மனிதவள் அமைச்சகம் தொழிலாளியின் உயிர் இழப்புக்கு காரணமான நபர்களின் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சம்பவத்திற்கான மூன்று நபர்களின் மீது வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள ராயல் கிரவுண்ட் ஃபிஷர் அண்ட் டிரேடிங் நிறுவனத்தின் இயக்குனரான 54 வயதான சான் யோக் போங் என்பவரின் அஜாக்கிரதையின் காரணமாக மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மரணம் அடைந்ததன் காரணமாக அவருக்கு திரை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஆசியா ஃபீல்டு நிறுவனத்தில் வெயிட் லிப்டிங் துறையில் வேலை பார்க்கும் 25 வயதான தமிழகத்தைச் சேர்ந்த அழகப்பன் கணேஷ் என்பவருக்கு பணியிடத்தில் அஜாக்கிரதையாக இருந்ததன் காரணமாக 18 வார சிறை தண்டனை அளிக்கப்பட்டது. அதேபோன்று தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு ஊழியர்கள் வேலை பார்க்கும் நிறுவனம் சிங்கப்பூரைச் சேர்ந்த பி எஸ் ஏ கார்ப்பரேஷன் எனப்படும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் வேலை பார்த்த வரதன் பிரபு என்ற ஊழியர் உயிரிழந்தன் காரணமாக அங்கு பணிபுரியும் முகமது அஷ்ரப் என்பவருக்கு ஏழு மாத சிறை தண்டனை விதித்து அரசு தீர்ப்பளித்துள்ளது.