TamilSaaga

சிங்கப்பூரில் 27% காலிப்பணியிடங்கள் – கொரோனா தாக்கத்தால் பணியாட்கள் பற்றாக்குறை

சிங்கப்பூரில் கால்பகுதி காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதாக அண்மையில் மனிதவள அமைச்சகம் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்ட போதும் 27% அளவிலான பணிகள் இன்னும் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜீன் மாத கணக்கீட்டின்படி சுமார் 1.63 என்ற விகிதத்தில் ஒரு நபருக்கு காலிப்பணியிடங்கள் இருந்ததாக திரு.டான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதில் பெரும்பாலான பணிகள் கட்டுமானத் துறையை சார்ந்தது எனவும் கொரோனா தாக்கத்தால் வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு கொண்டுவருவதில் தோய்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts