சிங்கப்பூரில் சமீபத்தில் தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதை (VTL) திட்டத்தில் சேர்க்கப்பட்ட எட்டு நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு 2,400 க்கும் மேற்பட்டவர்களுக்கு பயண பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAAS) நேற்று புதன்கிழமை (அக்டோபர் 13) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, சுமார் 40 சதவீத பாஸ்கள் ஐக்கிய நாடுகளில் இருந்து வந்த பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதை தவிற மற்ற நாடுகளான கனடா, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த எட்டு நாடுகளிலிருந்து பயணம் செய்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. மொத்தம் 2,409 தடுப்பூசி பயணப் பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 19 மற்றும் நவம்பர் 17 க்குள் சிங்கப்பூருக்கு பயணம் செய்ய வேண்டும்.
புருனே மற்றும் ஜெர்மனியில் இருந்து வரும் பயணிகளைப் பொறுத்தவரை சிங்கப்பூரின் முதல் இரண்டு தடுப்பூசி பயணப் பாதைகளின் படி 5,228 பாஸ்கள் செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 12 வரை வழங்கப்பட்டன என்று CAAS தெரிவித்துள்ளது. இது செப்டம்பர் 8 முதல் நவம்பர் 17 வரை சிங்கப்பூர் பயணத்திற்கான பாஸ்கள் ஆகும்.
தனிமைப்படுத்தப்படாத தடுப்பூசி பயண பாதையின் ஏற்பாட்டின் கீழ், சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு பாஸ் விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் தடுப்பூசி போடப்பட்ட பயண பாதை திட்டத்தின் கீழ் இப்போது 11 நாடுகள் உள்ளன. தென் கொரியாவுடனான தனிமைப்படுத்தல் இல்லாத பயண ஏற்பாடு நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கும்.
CAAS குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள், குறுகிய கால பார்வையாளர்கள் மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் உட்பட சராசரியாக தினமும் 3,000 VTL பயணிகளை சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பயணிகள் குறிப்பிட்ட விமானங்களில் மட்டுமே பயணம் செய்து நுழைய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
“விமான நிறுவனங்கள் அந்தந்த வணிகக் கருதுகோள்களின் அடிப்படையில் அவர்கள் இயக்க விரும்பும் விமானங்களைத் திட்டமிட்டு தயாராக இருக்கும்போது தங்கள் திட்டங்களை அறிவிக்கப்படும் என CAAS கூறினார்.
பயணிகள் இரண்டு பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (பிசிஆர்) சோதனைகளை எடுக்க வேண்டும். ஒன்று சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள், மற்றொன்று சாங்கி விமான நிலையத்திற்கு வந்தவுடன். இரண்டு மற்றும் அதற்கு குறைவான வயதுடைய குழந்தைகள் இந்த சோதனைகளுக்கு உட்படுத்த தேவையில்லை.
சிங்கப்பூர் புறப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பு தொடர்ச்சியாக 14 நாட்களில் VTL நாடுகள் அல்லது சிங்கப்பூரில் பயணிகள் தங்கியிருக்க வேண்டும்.
“நல்ல முடிவுகளால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ஆண்டின் இறுதியில் எண்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று CAAS டைரக்டர் ஜெனரல் ஹான் கோக் ஜுவான் கூறியுள்ளார்.