சிங்கப்பூரில் Only Fans என்ற ஆன்லைன் பிளாட்பார்மில் எலக்ட்ரானிக் முறையில் தனது அந்தரங்க உறுப்புகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியதாக 22 வயது Only Fans Creator ஒருவரது நேற்று டிசம்பர் 29 அன்று சிங்கப்பூரில் போலீசார் கைது செய்தனர். அதே தேதியில் போலீசார் வெளியிட்ட செய்தி குறிப்பில் செப்டம்பர் 4ம் தேதி ஒரு நபர் ஆபாசமான தகவல்களை மின்னணு முறையில் அனுப்புவதாக கூறப்படும் புகாரைப் பெற்றதாகக் கூறியது. அதிலும் குறிப்பாக அவரது அந்தரங்க உறுப்புகளின் படங்கள் மற்றும் வீடியோக்கள், அவரது Only Fans கணக்கு மூலம் பரப்பியதாக புகார் அளிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : மோகத்தால் பெற்ற பிஞ்சுகளை கொன்ற கொடூரம்.. – வெகுண்டு எழுந்து நீதிமன்றம்
உடனடியாக அக்டோபர் 11ம் தேதி அந்த நபரின் Only Fans கணக்கை முடக்கி அவர் அந்த கணக்கை பயன்படுத்தாதவாறு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மேலும், போலீசாரின் அந்த உத்தரவை அந்த நபர் மீறினால் கிரிமினல் குற்றமாகிவிடும் என்று அந்த நபரை எச்சரித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி, அந்த நபர் அதே கணக்கை மீண்டும் பயன்படுத்த அணுகியுள்ளார்.
Only Fans நிர்வாகிகளுக்கு தனது கணக்கு பாதுகாப்பாக இல்லை எனக் கூறி, கணக்கின் கடவுச்சொல்லை மீட்டமைக்கப்பட்டதாகக் கூறி அவர் இதைச் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதனையடுத்து அவரது கணக்கிற்கான அணுகலை மீண்டும் பெற்ற பிறகு, அந்த நபர் ஏற்கனவே பயன்படுத்திய இந்தக் கணக்கு மற்றும் இரண்டாவதாக உருவாக்கப்பட்ட ஒரு கணக்கு மூலம் அதிக ஆபாசமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை மின்னணு முறையில் தொடர்ந்து அனுப்பியதாக போலீஸார் தெரிவித்தனர். அதன்பிறகு, அந்த நபருக்கு நவம்பர் 1ம் தேதி, அவரது Only Fans கணக்குகள் இரண்டையும் அணுகக்கூடாது என்ற புதிய உத்தரவு வழங்கப்பட்டது.
நவம்பர் 1 ஆம் தேதி வழங்கப்பட்ட உத்தரவை மேலும் மீறுவது உட்பட, சாத்தியமான புதிய குற்றங்கள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் இன்று டிசம்பர் 30 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். காவல்துறையின் கூற்றுப்படி, அந்த நபர் தனது Only Fans கணக்கை அணுகக்கூடாது என்ற காவல்துறையின் உத்தரவிற்கு இணங்கத் தவறியதற்காக குற்றம் சாட்டப்படுவார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், இதற்கு S$5,000க்கு மிகாமல் அபராதம், ஆறு மாதங்களுக்கு மிகாமல் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இணைய வழியில் ஆபாச படங்களை பரப்பியதற்காகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.