சிங்கப்பூரில் 119 புக்கிட் மேரா வியூவில் வசிக்கும் சுமார் ஒன்பது குடும்பங்களில் 20க்கும் அதிகமானோருக்கு கொரோனா கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள ப்ளாக்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மாதிரிகளில் covid-19 கிருமிமாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க அந்த பிளாக்கில் வசிப்பவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. 119 புக்கிட் மேரா வியூவில் உள்ளவர்கள் மற்றும் அருகில் உள்ள 7 ப்ளாக்கில் வசிக்கும் மக்களும் பரிசோதனையில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்த பகுதியில் இந்த மாதம் 15ஆம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் கிருமித்தொற்று இல்லை என்று தெரியவந்தவர்கள் மீண்டும் பரிசோதனை செய்து கொள்வது அவர்களது விருப்பத்தை பொறுத்தது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் நாளை 21ம் தேதி முதல் பல தளர்வுகள் அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் தொற்று எண்ணிக்கியை பொறுத்து தளர்வுகள் திரும்பபெறப்படலாம் என்று அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.