TamilSaaga

“ஆப்” வைத்த ஆப்பு… “அந்த” ஆசைக்கு பொண்ணு வேஷம் போட்டு சீட்டிங் செய்த ஆசாமி… வச்சு செய்த சிங்கப்பூர் நீதிமன்றம்

பெண் வேடமிட்டு 19 மற்றும் 21 வயதுடைய இரண்டு ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த வாலிபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 2000$ அபராதம் விதித்துள்ளது.

கெண்ட் லிம் என்பவர் `HeyMandi’ என்ற டேட்டிங் ஆப்பை 2021ல் இருந்து பயன்படுத்தி வருகிறார். அந்த ஆப்பில் புரஃபைல் பிக்சர் வைப்பது கட்டாயமில்லை என்பதால், தனது புரஃபைலை பெண் கேரக்டராக வடிவமைத்து, சில ஆண்களுடன் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 2021 ஜூலை 5-ல் 21 வயதான ஆண் ஒருவரை லிம் HeyMandi-யில் சந்தித்திருக்கிறார். தன்னை 18 வயது பெண் என அறிமுகம் செய்து கொள்கிறார். இருவரும் பேசத் தொடங்கியதும் நெருக்கம் அதிகரித்து இருக்கிறது. தொடர்ச்சியாக, Telegram-ல் இருவரும் தங்களின் நெருக்கமான நட்பை வளர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் நெருக்கமாக இருப்பது பற்றி பேச்சு சென்றிருக்கிறது. அவரின் ஆசைக்கு இணங்குவதாக கூறிய லிம், தனக்கு 250 டாலர் வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்.

அதற்கு ஒப்புக்கொண்ட அந்த இளைஞரும் Paylah மூலம் பணத்தை அனுப்பி இருக்கிறார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் Telegram மற்றும் HeyMandi-ல் இவரின் சாட்களை அழித்துவிட்டு ப்ளாக் செய்திருக்கிறார் லிம். தொடர்ச்சியாக இதே ட்ரிக்கை பயன்படுத்தி 19 வயது இளைஞர் ஒருவரையும் ஏமாற்றி இருக்கிறார். அவரிடம் இதேபோல பாலியல் ஆசையை தீர்த்துக்கொள்ள 300 டாலர் வேண்டும் எனக் கூறி அதை வாங்கி விட்டு ஆள் மீண்டும் எஸ்கேப் ஆகி இருக்கிறார். ஆனால் 19 வயது இளைஞர், தான் ஏமாற்றப்பட்டோம் என தெரிந்தவுடன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து விட்டதாக அரசு வழக்கறிஞர் சுனில் நாயர் தெரிவித்தார்.

இதுகுறித்து, லிம்மின் வழக்கறிஞர் பெஞ்சமின் யாம் கூறுகையில், `எனது கட்சிக்காரர் புதிய நண்பர்களை உருவாக்க HeyMandi ஆப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்தி வந்தார். ஆனால், அவரிடம் பேச யாரும் முன்வரவில்லை. இதனால் தன் பாலினத்தை பெண்ணாக மாற்றி கொண்டார். அப்போது அவரிடம் நிறைய ஆண்கள் தானாக முன்வந்து பேச்சு கொடுத்தனர். லிம் அவர்களுடன் பேசி வந்தபோது, பலர் அவரிடம் பாலியல் ஆசைக்கு தூண்டினர். இதனால், தனது சுயகட்டுபாட்டை இழந்த லிம் அதை செய்வதாக கூறி இருக்கிறார். இருந்தும், தன்னால் ஏமாற்றப்பட்ட அந்த இரு இளைஞர்களுக்கும் முழு தொகையையும் திருப்பி கொடுத்து விட்டார்’’ எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், லிம் தரப்பை ஏற்க மறுத்ததோடு, அவருக்கு 2,000 சிங்கப்பூர் டாலர் தொகையை அபராதமாக விதித்திருக்கிறது. ஆன்லைனில் பெண்களோடு பழகுகையில் இளைஞர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையே இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts