சிங்கப்பூரில் 37 மற்றும் 45 வயதுடைய இரண்டு பெண்கள், இன்று ஆகஸ்ட் 14ம் தேதியன்று மகளிர் சாசனத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்று போலீஸ் செய்தி வெளியீட்டில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மசாஜ் நிறுவனங்களுக்குள் அவர்கள் பாலியல் சேவைகளை வழங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 11 வரை சிங்கப்பூரில் உள்ள சில மசாஜ் நிறுவனங்களில் போலீஸ் அமலாக்க துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆங் மோ கியோ காவல் பிரிவினர் ஆங் மோ கியோ அவென்யூ 4, ஆங் மோ கியோ அவென்யூ 10, பிரைட்டன் கிரெசன்ட், ஹூகாங் அவென்யூ 8, மேல் பயா லெபார் சாலை மற்றும் யியோ சூ காங் சாலை ஆகிய இடங்களில் அமைந்துள்ள மசாஜ் நிறுவனங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மசாஜ் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 7 மசாஜ் நிறுவனங்கள் பல்வேறு குற்றங்களை செய்திருப்பது இந்த தேடுதல் வேட்டையில் கண்டறியப்பட்டது. மேலும் 4 மசாஜ் நிலையங்கள் செல்லுபடியாகும் உரிமங்கள் இல்லாமல் செயல்பட்டு வந்ததாகவும் போலீசார் கண்டறிந்தனர்.
செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் மசாஜ் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.