TamilSaaga

“சிங்கப்பூரில் சில்லறை விற்பனையாளர்களுக்கான ஊதிய உயர்வு” : சமூக ஆதரவு தேவை – எம்.பி. யியோ வான் லிங்

சிங்கப்பூரில் உணவு, பானம் (F&B) மற்றும் சில்லறை விற்பனைத் துறைகளில் ஊதிய உயர்வு என்பது விலை அதிகரிக்க காரணமாக இருந்தாலும், முதலாளிகள் மற்றும் நுகர்வோர் குறைந்த ஊதியத் தொழிலாளர்களை மேம்படுத்துவதற்கு தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்று NTUCயின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பிரிவான U SME இன் இயக்குனர். எம்.பி. யோ வான் லிங் கூறியுள்ளார்.

புங்கோல் கடற்கரைப் பிரிவில் துப்புரவுப் பணியாளர்கள், சில்லறை மற்றும் எஃப் & பி தொழிலாளர்களுக்கு பராமரிப்புப் பொருட்கள் கொண்ட பரிசுப்பொருட்களை வழங்குவதற்கான விநியோக விழாவிற்கு முன்னதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 5) நடைபெற்ற ஊடக சந்திப்பில் திருமதி. யியோ பேசினார்.

இரண்டு துறைகளிலும் முற்போக்கான ஊதிய மாதிரியை (PWM) செயல்படுத்துவதற்கு ஒரு ஒட்டுமொத்த சமூக அணுகுமுறை எவ்வாறு முக்கியமானது என்பதைக் குறிப்பிட்ட அவர், தொற்றுநோய்களின் போது அதிக வேலை நேரம் மற்றும் பணிச்சுமைகளுடன் மனிதவள நெருக்கடிக்கு எதிராக போராடும் உள்ளூர் தொழிலாளர்களை ஆதரிக்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

NTUC ஊழியர்கள் மற்றும் புங்கோல் பகுதி தன்னார்வலர்களால் இரண்டு நாட்களில் மொத்தம் 2,300 பராமரிப்பு தொகுப்புகள் வழங்கப்பட்டன. இதில் முதல் 100 தொகுப்புகள் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி அன்று சமூக துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன. மீதமுள்ளவை இன்று ஞாயிற்றுக்கிழமை ஒயாசிஸ் டெரேஸ், புங்கோல் பிளேஸ் மற்றும் டெபிங் லேனில் உள்ள சில்லறை மற்றும் எஃப் & பி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts