TamilSaaga

சிங்கப்பூரில் குடிபோதையில் விரலை கடித்து துண்டாக்கிய தமிழர்… வாழ சென்ற நாட்டில் வாழ்க்கையை இழக்கலாமா?

குடிபோதை ஒரு மனிதனை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இப்படி ஒரு சம்பவம் தான் சிங்கப்பூரிலும் அரங்கேறி இருக்கின்றது. கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற இருவர், வந்த நோக்கத்தை மறந்து குடிபோதையில் சண்டையிட்டு, ஒருவர் விரலை மற்றொருவர் கடித்து துண்டாக்கிய சம்பவம் நடந்திருக்கின்றது.

தமிழ்நாடு சேர்ந்த தங்கராசு ரங்கசாமி என்பவர் திருநாகூரன் பாலசுப்பிரமணியத்தின் இடது கை ஆட்காட்டி விரலின் முன் பகுதியை கடித்து துப்பியுள்ளார். வெவ்வேறு விடுதியில் தங்கி இருந்த இரு ஊழியர்களும் ஏப்ரல் 22 ஆம் தேதி, இரவு 10 மணியளவில் நண்பர்களுடன் இணைந்து மதுபானம் அருந்தியுள்ளனர். மதுபானம் அருந்திக் கொண்டிருக்கும் பொழுது தங்கராசு சத்தமாக கத்த தொடங்கியுள்ளார். அருகில் இருந்த நண்பர் அவரை மெதுவாக பேச சொல்லி அறிவுறுத்தி இருக்கின்றார்.

குடிபோதையில் இவரது அறிவுறுத்தல் அவருக்கு புரியாமல் கோபமாக மாற அவரை அடிக்க அருகில் வந்துள்ளார். இந்நிலையில் திருநாகூரன் என்பவர் இருவருக்கு இடையே உள்ள சண்டையை விலக்கி விட வந்துள்ளார். அப்பொழுது இவரது கைவிரல் தெரியாமல் தங்கராசு என்பவரின் வாய்க்குள் சிக்கிக் கொண்டது. இந்நிலையில் குடிபோதையில் இருந்த அவர், விரலை துண்டாக்கினார். விரலில் அதிக ரத்தப்போக்கு வரவே தண்ணீரில் கழுவிய பின் பார்த்த பொழுது அவரது விரலில் முன் பகுதியை காணவில்லை. உடனடியாக நேரடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனவே விரலை கடித்த நபருக்கு 10 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts