TamilSaaga

சிங்கப்பூரில் நடந்த துயர சம்பவம்… பள்ளி சுற்றுலாவிற்கு சென்ற இந்திய மாணவன் உயிரிழப்பு!

இந்தியாவைச் சேர்ந்த 17 வயது மாணவரான கைரா என்பவர் டோவர் சாலையில் அமைந்துள்ள யுனைடெட் வேர்ல்ட் கல்லூரியில் பயின்று வருகின்றார். கடந்த ஜூன் மாதம் பள்ளி சுற்றுலாவிற்காக கம்போடிய தலைநகருக்கு பள்ளி ஆசிரியர்கள் மூலம் சென்றுள்ளார். சுற்றுலாவிற்கு சென்ற அவர் சாலை விபத்தில் இறந்துள்ளார்.

இச்சம்பவம் அப்பள்ளியில் பயிலும் மற்ற மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சம்பவம் நடந்த பொழுது, ஆசிரியர்கள் யாரும் மாணவர்களின் அருகில் இல்லாதது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சுற்றுலாவிற்கு சென்ற மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்களை கல்லூரி நிர்வாகம் தெரிவிக்க மறுத்துவிட்டது. சிங்கப்பூரில் புகழ்பெற்ற கல்லூரி கருதப்படும் யுனைடெட் வேர்ல்ட் கல்லூரிக்கு இரண்டு கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என கல்லூரியின் தலைவர் கூறியுள்ளார். மேலும் இது குறித்து கூறும் பெற்றோர்கள் மாணவர்கள் சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து அரசு நெறிமுறை படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர் இறந்து சம்பவத்தில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related posts