சிங்கப்பூரிலும் சீனப் புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு முகவர்களிடம் மட்டுமே பாக் குவா (Bak Kwa) அல்லது இனிப்பு உளர் இறைச்சியை வாங்கப்படுகிறதா என்பதைச் உறுதிசெய்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று வியாழன் (ஜனவரி 20) அன்று, சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) வெளியிட்ட முகநூல் பதிவில், “குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் அதிகாரிகள் இதுவரை மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக 169 அட்டைப்பெட்டிகள் மற்றும் 11 பாக்கெட்டுகளில் அங்கீகரிக்கப்படாத இதையும் படியுங்கள் : மன்னார்குடியின் மண் வீடுகளை மாடி வீடுகளாக்கிய “சிங்கப்பூர் தந்தை” லீ குவான் யூ – மாபெரும் சகாப்தம்!
மேற்குறிப்பிட்ட இவை அனைத்தும் இரு நாடுகளுக்கு இடையே உள்ள நிலச் சோதனைச் சாவடிகளில் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூருக்கு பாக் குவா மற்றும் பன்றி இறைச்சியை ஏற்றுமதி செய்ய மலேசியாவில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் எதுவும் இல்லை என்பதும் நினைவுகூரத்தக்கது. பக் குவா மற்றும் பன்றி இறைச்சி போன்ற இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்கள் தனிப்பட்ட நுகர்வுக்கு கூட அங்கீகரிக்கப்பட்ட மூலங்களிலிருந்து மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்று SFA தெரிவித்துள்ளது.
SFA மேலும் கூறுகையில் : “சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் அறியப்படாத மூலங்களிலிருந்து வந்தவை மற்றும் உணவுப் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று எச்சரித்துள்ளது. மேலும் “நுகர்வோர் நிறுவப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து வாங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சந்தேகம் இருந்தால், வாங்குவதற்கு முன் ஆதாரத்தைப் பற்றிய கூடுதல் தகவலை சப்ளையரிடமிருந்து கேட்டு பெறலாம்” என்றும் கூறியுள்ளது.
சட்டவிரோதமாக இறைச்சி பொருட்களை இறக்குமதி செய்பவர்களுக்கு $50,000 வரை அபராதம் மற்றும்/அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அடுத்தடுத்த குற்றங்களுக்கு, அவர்களுக்கு $1,00,000 வரை அபராதம் மற்றும்/அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.