TamilSaaga

சிங்கப்பூரில் 16 விரைவு பெருந்தொற்று சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ள – சுகாதார மேம்பாட்டு வாரியம்

சிங்கப்பூரில் கடந்த மாதம் தொடங்கி தற்போது நாடு முழுவதும் சுமார் 16 பெருந்தொற்று குறித்த விரைவான சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் அதன் சோதனை திறன்களை அதிகரிக்கும் போது மேலும் நான்கு மையங்கள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தொற்று சோதனையை ஆதரிக்கும் தேசிய நிறுவனமான சுகாதார மேம்பாட்டு வாரியம் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 23) தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் அளித்த தகவலின்படி, ஒவ்வொரு மையத்திற்கும் அதன் அளவைப் பொறுத்து தினசரி 400 முதல் 1,000 வரை சோதனை திறன் உள்ளது என்று கூறியது. இதனால் இந்த மையங்களின் வழியாக ஒவ்வொரு நாளும் குறைந்தது 6,400 சோதனைகள் நடத்தமுடியும்.

இந்த 16 மையங்களில் கடந்த ஜூன் 21 முதல் கடந்த புதன்கிழமை வரை சுமார் 13,900 சோதனைகள் நடத்தப்பட்டதாக HPB தெரிவித்துள்ளது. அவை ஆங் மோ கியோ, பிஷன், ஹ காங், ஜுராங் வெஸ்ட் மற்றும் பாசிர் ரிஸ் ஆகிய இடங்களில் உள்ள மையங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சரியான போக்குவரத்து கட்டுப்பாடு, வரிசை மேலாண்மை, தொற்று கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும், மையத்திற்கு வருபவர்களைப் பாதுகாப்பதற்கும் தேவைப்படும் நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கான குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக HPB தெரிவித்தது.

Related posts