TamilSaaga

சிங்கப்பூர் Standard Chartered வங்கி கொள்ளை – ஜேம்ஸ் ரோச்சிற்கு பிரம்படி தண்டனை ரத்து

உலக அளவில் புகழ்பெற்ற Standard Chartered வங்கி கொள்ளை சம்பவத்தில் தண்டனை விதிக்கப்பட்ட கனடா நாட்டைச் சேர்ந்த டேவிட் சம்ஸ் ரோச் என்பவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் இருந்து தற்போது பிரம்படி தள்ளுபடி செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

31 வயதான ரோச் கனேடிய நாட்டைச் சேர்ந்தவர், சிங்கப்பூரில் கடந்த ஜூலை 7, 2016ன் ஆண்டு ஹாலண்ட் கிராமத்தில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு கிளையை கொள்ளையடித்து, அதன் பின்னர் சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்திற்கு தப்பிச் சென்றார். அதன் பிறகு அவர் தாய்லாந்தில் பிடிபட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். மேலும் 2018ல் கனடாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதனை தொடர்ந்து சிங்கப்பூர் அரசு கைது கோரிக்கையை முன்வைத்ததையடுத்து பிரிட்டிஷ் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

மேலும் ஒப்படைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் அரசு இங்கிலாந்து அதிகாரிகளுக்கு டேவிட்க்கு எந்தவிதமான உடல்ரீதியான தண்டனையும் வழங்கப்படக்கூடாது என்று கேட்டுக்கொண்டது. இந்த ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி, ரோச்சிற்கு சிங்கப்பூரில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஆறு பிரம்பாடிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அவருக்கு பிரம்படி வழங்கப்படாது என்றும், மேலும் அதற்கு பதிலாக வேறு எந்த வித தண்டனையும் வழங்கப்படமாட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts