TamilSaaga

வயதோ 16 to 71.. மோசடி எண்ணிக்கையோ 495.. “எங்களுக்கே தண்ணிக்காட்ட பார்த்தாங்க” – சிங்கப்பூர் போலீசின் அதிரடி “வேட்டை”

சிங்கப்பூரில் மோசடி செய்பவர்களை ஒடுக்கும் இரண்டு வார முயற்சியில் தீவு முழுவதும் நடந்த நடவடிக்கையில், 157 சந்தேக நபர்கள் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது சந்தேகிக்கப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் S$2 மில்லியனுக்கும் அதிகமாக இழந்துள்ளனர் என்று சிங்கப்பூர் காவல் படை (SPF) இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 11) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 97 ஆண்கள் மற்றும் 60 பெண்கள் அடங்கிய சந்தேக நபர்கள் 16 மற்றும் 71 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் 495க்கும் மேற்பட்ட மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர்.

“சகலகலா வல்லவன்” – சிங்கப்பூரின் புதிய ராணுவத் தலைவராக டேவிட் நியோ நியமனம் – படிப்படியாக முன்னேறிய புதிய “ஹீரோ”

இந்த வழக்குகளில் முக்கியமாக இணைய காதல் மோசடிகள், இ-காமர்ஸ் மோசடிகள், வங்கி தொடர்பான மோசடிகள், தொழில்நுட்ப ஆதரவு மோசடிகள், சீனா/அரசு அதிகாரிகளின் ஆள்மாறாட்டம் மோசடிகள், முதலீட்டு மோசடிகள், வேலை மோசடிகள் மற்றும் கடன் மோசடிகள் ஆகியவை அடங்கும். இரண்டு வார நடவடிக்கை ஜனவரி 28 மற்றும் பிப்ரவரி 10க்கு இடையில் நடைபெற்றது Commercial Affairs மற்றும் ஏழு போலீஸ் நிலப் பிரிவுகளின் அதிகாரிகள் இதில் ஈடுபட்டுள்ளனர்.

மோசடி செய்தல், பணமோசடி செய்தல் அல்லது உரிமம் இல்லாமல் பணம் செலுத்தும் சேவைகளை வழங்குதல் போன்ற குற்றங்களுக்காக சந்தேகநபர்கள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தற்போது அவர்கள் மீது சந்தேகத்தின் அடிப்படையில் உள்ள மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். அதேபோல பணமோசடிக்கு 10 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை, S$500,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

“Super Markets-களில் வாங்கும் பொருட்களின் எடையை அங்கேயே செக் பண்ணிக்கணும்.. வீட்டுக்கு போயிட்டு குறை சொல்லக் கூடாது” – சிங்கப்பூர் நுகர்வோர் சங்கம்

உரிமம் இல்லாமல் எந்தவொரு கட்டணச் சேவையையும் வழங்குவதற்காக வணிகத்தை மேற்கொள்வதற்கான குற்றத்திற்கு S$1,25,000க்கு மிகாமல் அபராதம், மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts