சிங்கப்பூரில் கடந்த செப்டம்பர் 28, 2021 முதல் சுமார் ஐந்து நாட்களாக காணாமல் போன 15 வயது சிறுமி எங்கு இருக்கிறார் என்ற தகவல் குறித்து சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) பொதுமக்களிடம் முறையிட்டுள்ளது. லினெட் லிம் ஷு ஹுய் என்ற அந்த 15 வயது சிறுமி கடைசியாக சம்பத்தன்று காலை 3:30 மணிக்கு, 3 Yishun Closeல் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் இவரை பற்றின அல்லது இவர் இருக்கும் இடம் குறித்த தகவல்கள் கிடைத்தால் 1800-255-0000 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் அல்லது ஆன்லைனில் தங்களுடைய புகாரை சமர்ப்பிக்கலாம். இந்த வழக்கு சம்மந்தமாக பெறப்படும் தகவல் அனைத்து கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 24) மாலை முதல் காணாமல் போன 13 வயது சிறுவனை தேடும் பணியில் பொதுமக்கள் தங்கள் பணியை அளிக்குமார் போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தனர். பிரையன் டான் ஷி யோங் என்று அந்த சிறுவன், கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் ஃபாரர் பூங்காவில் உள்ள ஸ்டர்டீ சாலையில் தனது சைக்கிளுடன் காணப்பட்டார் என்று சிங்கப்பூர் போலீஸ் படை சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
போலீசார் மற்றும் பொதுமக்களின் உதவியால் அந்த சிறுவன் அதன் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.