TamilSaaga

பார்ட் டைம் கோழிப்பண்ணை முதலாளியான 14 வயது சிறுவன்.. முதல் முயற்சியிலேயே ஒரு லட்சம் சம்பாதித்து அசத்தல்!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்ற 14 வயது சிறுவன் நாட்டு கோழி பண்ணையை தொடங்கி தற்பொழுது வருடத்திற்கு ஒரு லட்சம் சம்பாதித்து அசத்தியிருக்கிறார்.இவர தாய் பனியன் கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிலாளி மற்றும் தந்தை கூல்ட்ரிங்க்ஸ் கம்பெனியில் மாத சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்.இவரது தாத்தா விவசாயம் செய்து கொண்டே கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார். அவரது தாத்தா வீட்டிற்கு பரிட்சை லீவுக்கு சென்றவருக்கு கோழி வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் வரவே அதனை பெற்றோரிடம் கூறி கோழி பண்ணை அமைக்க ஏற்பாடு செய்து தரும்படி கேட்டிருக்கிறார்.

இவரும் ஆர்வமாக இருக்கவே தொடக்கத்தில் பத்தாயிரம் ரூபாய் செலவில் கோழிப்பண்ணை அமைத்துக் கொடுத்துள்ளனர். கோழி வளர்ப்பில் ஏற்படும் சந்தேகங்களுக்கு தனது தாத்தாவிடம் கேட்டு தெரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் youtube ஐ கொண்டுள்ளார். தொடக்கத்தில் 10 கோழிக்குஞ்சுகளை வாங்கிய இவர் படிப்படியாக பண்ணையை பெருக்கியுள்ளார்.கோழிகளுக்கு தடுப்பூசி போடுவது நோய் ஏற்படும்போது பராமரிப்பது உள்ளிட்ட அனைத்தையும் உள்ளங்கையில் வைத்திருக்கின்றார்.அது மட்டுமல்லாமல் தனது பண்ணையின் மூலம் முதல் கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்து அசத்திருக்கின்றார் இந்த இளம் தொழிலதிபர்.

Related posts