சிங்கப்பூர் உண்மையில் ஒரு நல்ல (Fine) நாடு தான். ஆனால், அங்குள்ள விதிமுறைகள் முழுதாக தெரியாமல் கோக்குமாக்கு வேலைகளில் ஈடுபட்டால் கடுமையான அபராதங்கள் (Fine) செலுத்த நேரிடும்.
ஸோ, இந்த கட்டுரையில் நீங்கள் சிங்கப்பூரில் கட்டாயம் செய்யக்கூடாத அல்லது ஈடுபடக்கூடாது 12 விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
- chewing gum-க்கு நோ
சிங்கப்பூரில் chewing gum வாங்கவோ அல்லது இறக்குமதி செய்யவோ தடை உள்ளது. உங்களிடம் chewing gum இருந்தால், அதை நீங்கள் நிச்சயமாக தெருக்களில் துப்ப முடியாது. நீங்கள் துப்பினால் $500 (ரூ. 23,121) அபராதம் விதிக்கப்படலாம். இருப்பினும், விதிவிலக்குகள் உள்ளன. 2004 முதல், குணப்படுத்தும் நோக்கங்களுக்காக chew gum தேவைப்படுபவர்கள் மற்றும் அதற்கான மருத்துவ பரிந்துரைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
- ஆபாசம் கூடாது, நிர்வாணமாக நடமாடவும் கூடாது
உங்கள் வீட்டிற்கு வெளியே ஜஸ்ட் நிர்வாணமாக நீங்கள் இருப்பது தெரிந்தால் கூட, உங்களுக்கு $2,000 வரை அபராதம் அல்லது 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதேபோல், அடல்ட் படங்களைப் பார்த்து மாட்டிக் கொள்ளாதீர்கள்.
- குப்பை கொட்டக்கூடாது
எச்சில் துப்புதல் மற்றும் குப்பை கொட்டினால் $1,000 (ரூ. 46,242) அபராதம் விதிக்கப்படும்.
- MRT இல் கவனமா இருக்கணும்
சிங்கப்பூரின் MRT ரயில்களில் பயணம் செய்யும் போது, நீங்கள் சாப்பிடவோ குடிக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. அவ்வாறு செய்தால் $500 (ரூ. 23,121) வரை அபராதம் விதிக்கப்படலாம்.
- பாதுகாப்பற்ற WiFi உடன் கனெக்ஷன் வேண்டாம்
சிங்கப்பூரில் இருக்கும்போது உங்கள் “auto-discovery” அமைப்பை ஆஃப் செய்து வைப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். பாதுகாப்பற்ற வைஃபை இணைப்பைப் பயன்படுத்துவது, Computer Misuse சட்டத்தின் கீழ், கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. உங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது $10,000 (ரூ 4,62,708) வரை அபராதம் செலுத்த வேண்டும்.
- நீங்கள் என்ன பொருளை பரிசளிக்கிறீர்கள்? எப்படி பரிசளிக்கிறீர்கள்? என்பதில் கவனம் தேவை
சிங்கப்பூரில் ஒருவருக்கு பரிசளிக்கும்போது, பின்வரும் விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்:
கடிகாரங்கள், பூக்கள் மற்றும் கைக்குட்டைகள் அல்லது பூக்கள் சீன இறுதிச் சடங்குகளுடன் தொடர்புடையவை. எனவே, அவற்றை பரிசுகளாக கொடுக்க வேண்டாம்
உங்கள் இடது கையால் பரிசுகளை வழங்க வேண்டாம்
- பொது இடத்தில் புகைபிடித்தல் கூடாது
பொது இடத்தில் புகைபிடித்தால் $200 அபராதம் செலுத்த வேண்டும். உஷாரா இருங்க.
- சுவர்களில் எழுதுவது, கிறுக்குவது கூடாது
சிங்கப்பூரில் எந்தச் சுவரிலும் ‘கவிதா.. ஐ லவ் யூ’ என்று மறந்தும் கூட பழக்க தோஷத்தில் எழுதியோ, கிறுக்கியோ வைத்துவிடாதீர்கள். இதற்கு பிரம்படி மற்றும் சிறைத் தண்டனை கிடைக்கலாம்,
- போதை மருந்துகள் கூடவே கிடையாது
சிங்கப்பூரில் இருக்கும்போது போதைப்பொருள் பற்றிய நினைப்பே வரக்கூடாது. கடுமையான தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
- Flush செய்யாமல் வரக்கூடாது
நீங்கள் பொது கழிப்பறையைப் பயன்படுத்தி, சுத்தம் செய்ய மறந்துவிட்டால், உங்களுக்கு $150 (ரூ. 6,936) அபராதம் விதிக்கப்படும்.