சிங்கப்பூரில் வெளிப்புறங்களில் வெயிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஐந்து நிமிடம் ஓய்வு கொடுக்கப்பட வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரபு நாடுகளில் வெயில் காலத்தின் பொழுது அவர்களுக்கு பகல் நேரத்தில் ஓய்வு அளிக்கும் திட்டமானது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் சிங்கப்பூர் அரசு தற்பொழுது இந்த முடிவினை வெளியிட்டுள்ளது.
கட்டுமான பணி பணி உள்ளிட்ட அதிக வெப்பம் மிகுந்த சூழ்நிலையில், வெயிலில் வேலை பார்க்கும் பொழுது ஏற்படக்கூடிய வெப்பத்திலிருந்து தொழிலாளர்களை பொருட்டு இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது உடனடியாக அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்களின் உடலின் வெப்பநிலையை அளவிடும் கருவி பொருத்தப்பட்டு முதலாளிகள் தொழிலாளர்களின் உடல் வெப்பநிலையை கணக்கிட வேண்டும் எனவும் உடல்நிலை சரியில்லாமல் ஒரு வாரத்திற்கு மேல் விடுப்பு எடுத்துக் கொண்டு திரும்பும் தொழிலாளர்களுக்கு வெளிப்புறங்களில் கொடுக்கப்படும் வேலையானது படிப்படியாக அதிகரித்து பின்பு கொடுக்கப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிப்புறத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இனி சிரமமின்றி வேலை செய்பவர்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.