TamilSaaga

யம்மா…! என்னமா இப்படிப் பண்றீங்களேமா! பூனை உணவை உட்கொள்ளும் பெண்!

பொதுவாக உலகம் முழுவதும் வித்தியாசமான  உணவுகளை உண்ணுவதில் பலருக்கு ஆர்வம் இருக்கும். பூச்சிகள், முதலை, பாம்புகள் என மனிதர்கள் உண்ணாத உணவே இல்லை எனக் கூறலாம்.

இதனை பலர் ரசிக்கவும் செய்கின்றனர். தற்பொழுது சமூக வலைத்தளங்களுக்காக புதிது புதிதாக உணவுகளை உட்கொண்டும் வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு பெண் பூனைகள் உட்கொள்ளும் உணவை ருசிபார்த்துள்ளார். அதனை அவர் டிக் டாக் பக்கத்தில் வெளியிட்டு தன்னை பின்தொடர்பவர்களுக்கும் பரிந்துரை செய்துள்ளார்.

இந்தோனேசியாவைச் சேர்ந்த இப்பெண் ஒரு பூனைக் குட்டியை வளர்த்து வருகிறார். தனது பூனை மேல் அதீத பாசம் கொண்ட  இவர் , பூனை உட்கொள்ளும் உணவு கூட ருசியாகவும் சிறப்பாகவும் இருக்க வேண்டும் என நினைப்பாராம். நினைத்ததோடு மட்டுமல்லாமல் அந்தப் பூனையின் உணவை அவரும் உட்கொண்டு அது ருசியாக இருக்கிறதா என உறுதிப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

கேட்கவே வித்தியாசமாக இருக்கிறதல்லவா! இதற்கு அவர் சில விளக்கங்களும் கொடுத்துள்ளார். பூனையின் உணவு உண்மையிலேயே மிகவும் ருசியாக இருக்குமாம். அதிலும் கிரேவி போல் இருக்கும் உணவுகள் மேலும் ருசியாக இருக்குமாம். இவருக்கு ட்ரய்-யான உணவை விட கிரேவி போன்ற பதத்தில் இருக்கும் உணவுகள் தான் மிகவும் பிடிக்குமாம். இது நூடுல்ஸ் உடன் வைத்து சாப்பிட மிகவும் சிறப்பாக இருக்குமாம்.

இப்படி பதிவிட்டவர் தன்னை பின்தொடர்ப்பவர்களுக்கும் பூனை உணவை உட்கொள்ள பரிந்துரை செய்துள்ளார். அது டிக் டாக் பக்கத்தில் வைரலான விவாதமாக மாறி வருகிறது.

மேலும் Catto எனப்படும் பூனை உணவுகள் தாயாருக்கும் நிறுவனம்,  தங்கள் நிறுவன உணவுகள் 100% மனிதர்கள் சாப்பிடக் கூடியது எனவும் அதில் எந்தவித ரசாயனப் பொருட்களும் சேர்க்கப்படவில்லை எனவும் பதிவிட்டுள்ளனர். மேலும் அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அங்கு தயாரிக்கப்பட்ட பூனை உணவுகளை ருசிபார்க்கும் படி ஒரு விளம்பரத்தையும் எடுத்துள்ளனர்.

அதனை சுட்டிக் காட்டி,  பூனை உணவுகள் பெரும்பாலும் மனிதர்கள் உண்ணக் கூடியது தான் எனவும் அந்தப் பெண் பதிவிட்டுள்ளார். 

இந்த வீடியோவின் கீழ், உங்களுக்கு வாந்தி வரவில்லையா! ஒவ்வாமை ஏற்படவில்லையா, நீங்கள் சாப்பிடுங்கள் எங்களை ஏன் சாப்பிடச் சொல்கிறீர்கள் என பல பேர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சரி நீங்கள் எந்த பிராண்டு பூனை உணவை சாப்பிடப் போகிறீர்கள்!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

 

Related posts