TamilSaaga

சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல skilled test-ஆ? அப்படினா என்னாப்பா? என்னென்ன படிப்பு இருக்கும்? இத படிங்க செம Clarity கிடைக்கும்

சிங்கப்பூரில் செல்ல skilled test அடிச்சிருக்கேன் என பலரும் கூறி கேட்டிருப்பீர்கள். அப்படினா என்னப்பா அதுனு உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்துச்சுனா இந்த பதிவு உங்களுக்கு தான். இதை தெரிந்து கொள்ளும் பட்சத்தில் நாளை உங்கள் எதிர்காலத்திற்கு கூட இது உதவியாக இருக்கலாம்.

வெளிநாட்டு வேலை என்றாலே பலரின் எண்ணத்தில் முதலில் வருவது சிங்கப்பூர் தான். ஏனெனில் இங்கு உங்களுக்கு பாதுகாப்பு இருப்பதுடன் தமிழ்நாட்டினை போன்ற உணர்வே கொடுக்கும். படித்தவர்கள் தங்களிடம் இருக்கும் டிகிரி அல்லது டிப்ளமோவில் சிங்கப்பூர் வந்து வேலைக்கு சேர்ந்து விடுவார்கள். ஆனால் இதற்கு 4 லட்சத்திற்கு மேல் செலவுகள் இருக்கும். ஆனால் செலவு கொஞ்சம் குறைவாக ஏமாறாமல் சிங்கப்பூர் வர இருக்கும் ஒரே வாய்ப்பு தான் Skilled Test.

தமிழ்நாட்டில் இருக்கும் அங்கீகாரமிக்க skilled இன்ஸ்ட்யூட்களில் அட்மிஷன் போடுங்கள். முதல் பணமாக சில ஆயிரங்கள் மட்டுமே கேட்பார்கள்.

Architectural Trade துறையில் Plastering, Timber Door, Bricklaying, Interior Drywall, Tiling, Suspended Ceiling, Water Proofing ஆகிய படிப்புகள் இருக்கிறது.

Structural Trade துறையில் Timber Formwork, Aluminium Formwork, Steel Reinforcement ஆகிய படிப்புகள் உள்ளன.

M & E Tradeல் Thermal Insulation, Electrical Wiring Installation, Plumbing & pipe Fitting, Ducting Installation – AC ஆகிய படிப்புகள் இருக்கிறது.

Pipe-Fitting, Precast Kerb & Drain Laying, Structural Steel Fitting, Welding ஆகிய படிப்புகள் civil துறையில் இருக்கிறது.

Future Proposed துறையில் lifting படிப்பு மட்டும் இருக்கிறது.

மேலே குறிப்பிட்டு துறைகளினை முதலில் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். இதில் உங்களுக்கு அனுபவம் வாய்ந்த படிப்பில் சேர்ந்து 45 முதல் 60 நாட்கள் படிக்க வேண்டும். பெரும்பாலும் practical வகுப்பாக தான் இருக்கும். ஒரு தியரி தேர்வும் எழுத வேண்டும். practical தேர்வின் போது சிங்கப்பூர் கம்பெனியில் இருந்து மேற்பார்வையாளராக அதிகாரியும் வருவார். இதில் பாஸ்ஸாகி விட்டால் அடுத்த ஒரு மாதத்திற்குள் உங்களுக்கு ரிசல்ட் வந்து விடும். தொடர்ந்து உங்களுக்கு தெரிந்த ஏஜென்ட் மூலம் சிங்கப்பூரில் வேலை தேடலாம். இதற்கு 2ல் இருந்து 3 லட்ச வரை ரூபாய் செலவாகும்.

Skilled test முடித்து வொர்க் பெர்மிட்டில் வேலைக்கு வருபவர்களுக்கு முதலில் ஒரு நாளைக்கு சம்பளமாக $18ல் இருந்து $20 சிங்கப்பூர் டாலர்கள் சம்பளமாக இருக்கும். OTயும் நாளைக்கு 2 நாட்கள் இருக்கும். இதற்கு சம்பளமாக சில நிறுவனங்கள் 2 மடங்கு அல்லது 1.5 மடங்கு கொடுக்கும். மேலும் இந்த பாஸில் சிங்கப்பூர் வருபவர்களுக்கு தங்குமிடத்தினை கம்பெனியே கொடுத்து விடும். அதற்கு சம்பளத்தில் எந்த தொகையும் பிடிக்க மாட்டார்கள். சாப்பாட்டிற்கு மட்டும் உங்களுக்கு மாதம் $130 சிங்கப்பூர் டாலர் வரை செலவாகலாம்.

டெஸ்ட் முடித்து சான்றிதழ் வைத்திருப்பவர்களால் 10 வருடம் சிங்கப்பூரில் தொடர்ந்து வேலை செய்ய முடியும். வருடங்கள் ஆக ஆக உங்களுக்கு சம்பள உயர்வு கூட கிடைக்கும். சிலர் skilled test அடித்து சிங்கப்பூர் வந்து இங்கிருந்து S-Passக்கு கூட மாறி இருக்கிறார்கள். புது வருஷம் பிறக்க போவதை தொடர்ந்து சில அறிவிப்புகள் skilled டெஸ்ட் வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts