விமானத்தில் பயணம் செய்யும் போது அங்கிருக்கவர்களை சிரித்த முகத்துடனே உபசரிப்பவர்கள் தான் ஏர் ஹோஸ்டஸ். சிரித்துக்கொண்டே இருந்தாலும் அவர்கள் அந்த இடத்திற்கு வர பெரிய அளவில் போராட்டங்களை சந்தித்திருப்பார்கள்.
பயணியர் விமானங்கள், ராணுவ விமானங்களில் இருக்கும் பயணிகள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்வதே ஏர்ஹோஸ்டஸ் எனப்படும் கேபின் க்ரூக்களின் முக்கிய வேலை. முதலில் ஏர் ஹோஸ்டஸ் அங்கிருக்கும் அனைவருக்கும் தேவையானவற்றை செய்து தர வேண்டும். விமானம் பறக்க தொடங்கும் முன்னரே அவசர கால செய்முறைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்கிறார்களா என்பதை கவனமாக கண்காணிக்க வேண்டும்.
பயணத்தில் அங்குள்ளவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது துவங்கி விமானம் தரையிறங்கிய பின்னர் பயணிகள் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு கீழே இறங்கும் வரை ஏர் ஹோஸ்டஸ் தான் பொறுப்பாக அவர்களை வழி நடத்த வேண்டும்.
இதில் அவர்கள் மரியாதை இல்லாமல் பேசும் பயணிகளிடம் கூட முக சுளிப்பை காட்டவே முடியாது. அவர்களுக்கும் மரியாதை கொடுத்து சிரித்துக்கொண்டே தான் பேச முடியும். சண்டையே போட்டால் கூட சிரித்த மாதிரியே தான் ஏர் ஹோஸ்டஸ் பதில் தர வேண்டும். மோசமாக பார்க்கும் ஆண்களை அசட்டை செய்யும் பணிகளுக்கு இது சுணக்கமான வேலை தான். அப்படிப்பட்ட ஆண்களிடமும் சிரித்து கொண்டே இருக்க வேண்டும்.
மற்ற வேலைகளை போல அல்லாமல் இந்த வேலைக்கு அவர்கள் உடல் ஆரோக்கியம் ரொம்பவே முக்கியமானதாக இருக்க வேண்டும். ஆபத்தான நேரத்தில் தங்கள் உயிரை துச்சமாக முன் வைத்து பயணிகளை காப்பாற்ற வேண்டும் என்பதால் உடல் எடையை தொடர்ந்து ஒரே அளவில் தான் பராமரிக்க வேண்டும்.
பொது விடுமுறைக்கான நாளிலோ பண்டிகை நாளிலோ லீவ் கிடைக்காமல் சுற்றிக்கொண்டே தான் இருக்க வேண்டும். அவர்கள் குடும்பம் பண்டிகை நாளில் கவலையுடன் இவர்களுக்காக காத்திருக்கும் போது இவர்கள் இங்கு சிரித்துக்கொண்டே தங்கள் உபசரிப்பை செய்திருப்பர்.
விமானத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளால் பயணங்களில் தடங்கல் வரும்போது அவர்களுக்கு ஏற்படும் சிக்கலே பிராதனமாக இருக்கும். ஒரு விமானத்தில் இருந்து இன்னொன்றுக்கு மாறும் போது இந்த நேர தாமத்தால் அவர்களின் வேலை பாதிக்கப்படும். இதில் அந்த நேரத்தில் பயணிகள் சொல்லும் கடும் சொற்களை கூட சிரித்துக்கொண்டே தான் சமாதானம் செய்வார்கள்.
மேலும், இந்த வேலைகளில் அதிக அளவில் முன்னேற்றம் எல்லாம் இருக்காது. பணி உயர்வு கூட எளிதில் கிடைக்காது என்பதால் பல வருடமாக ஒரே பணியில் தான் இருக்க வேண்டும். ஏர் ஹோஸ்டஸ் தங்கள் வேலைக்கான அட்டவணையைப் பொறுத்து timezone களில் அதிக மாற்றங்களை சந்திக்க நேரிடுவர். ஜெட் லேக் வெவ்வேறு நபர்களுக்கு பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தலாம். இதில் பொதுவாக சோர்வு, தலைவலி மற்றும் கவனக்குறைவு போன்ற உடல் பக்க விளைவுகளை ஏற்படும். இதை தாண்டியே அவர்கள் முகத்தில் அந்த புன்னகை எப்போதுமே இருந்து கொண்டிருக்கும்.
நாம் எப்போதுமே சிரித்துக்கொண்டே முழு மேக்கப்புடன் இருக்கும் ஒவ்வொரு ஏர் ஹோஸ்டஸ் பின்னாலும் இருக்கும் அந்த இறுக்கம். சொல்லி மாளாது. இனிமே ஏர் ஹோஸ்டஸை பார்க்கும் போது நீங்களும் ஒரு சிரிப்பினை சிந்துங்கள். அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய பணி உயர்வு தான்.