சிங்கப்பூர் வேலைக்கு செல்ல skilled test அடித்திருந்தால் உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி தான் இப்போது வந்திருக்கிறது.
வெளிநாட்டு வேலைக்கு சென்று கஷ்டப்பட்டு உழைத்து எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்று நினைப்பவர்களுக்கு அது அவ்வளவு எளிதில் நடந்து விடுவதில்லை. எப்போதுமே முதல் படியிலேயே செலவுகள், பிரச்னைகள் என வரிசையாக நிற்கும்.
ஆனால் கடந்த 2022ம் ஆண்டில் Skilled டெஸ்ட் முடித்தவர்களுக்கு ரிசல்ட் வருவதே பெரிய பிரச்னையாக இருந்தது. ஏற்கனவே கோட்டா ரிலீஸ் செய்யப்பட்டு சிங்கப்பூர் வேலைக்கு ஊழியர்கள் வராமல் இருந்ததால், அவர்கள் இங்கு வந்த பிறகு மீண்டும் கோட்டா என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இருக்கு பயிற்சி இன்ஸ்ட்டியூட்கள் கூட தொடர்ந்து அட்மிஷன் போட்டாலும் மெயின் டெஸ்ட் ஏற்றுவதில் சிரமப்பட்டனர். இதை தொடர்ந்து, கடந்த மாதம் செப்டம்பர் 30 வரை எழுதியவர்களுக்கு Skilled ரிசல்ட் வந்துவிட்டது. அடுத்து அக்டோபர், நவம்பர் மாதத்திற்கு ரிசல்ட் எப்போது வரும் என தவித்து இருந்த பலருக்கு ஒரு வழியாக நல்ல செய்தி வந்திருக்கிறது.
அக்டோபரில் முதல் 7 நாட்களில் தேர்வு எழுதியவர்களுக்கு ரிசல்ட் வந்துவிட்டதாக தமிழ்நாட்டை சேர்ந்த S.V Training இன்ஸ்ட்டியூட்டில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்னும் ஒரு சில தினங்களில் அடுத்த வாரத்தில் கூட அக்டோபர் மாதத்தில் தேர்வு எழுதியவர்களுக்கு முழுமையாக ரிசல்ட் வந்துவிடும் என்று இன்ஸ்ட்டியூட் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மேலும், இந்த ரிசல்ட்டிலேயே நவம்பருக்கும் வரலாம். அல்லது அடுத்து 3 வாரத்திற்குள் நவம்பருக்கும் ரிசல்ட் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரிசல்ட்டில் வெற்றி பெற்ற அனைவருக்கும் தமிழ் சாகா சார்பில் அடுத்த நல்ல ஒரு எதிர்காலத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.