நாம் கண்ணால் கூட பார்க்க முடியாத பல விஷயங்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்துவது தான் கலையின் சிறப்பு.அதிலும் புகைப்பட கலை என்றால் சொல்லவே வேண்டாம். பல அரிய விஷயங்களை தேடித்தேடி புகைப்பட கலைஞர்கள் விருந்தாக அளிப்பதுண்டு. அப்படி சிங்கப்பூர் புகைப்பட கலைஞர் ஒருவர் பதிவிட்ட புகைப்படம் அனைவரையும் பிரமிக்க வைத்தது என்றால் நம்ப முடியுமா. ஆம் உண்மையிலேயே நாம் நேரில் சென்றால் கூட இத்தகைய காட்சி கிடைக்காது.
கடலுக்கு அடியில் ஒரு மீன் மற்றொரு மீனை விழுங்கியதைப் போன்று அவர் எடுத்த புகைப்படம் தான் பயங்கர டிரண்டாகி அவருக்கு முதல் பரிசினை பெற்று தந்தது.கடலுக்கு அடியில் நீந்தி சென்று புகைப்படமாக எடுப்பதில் ஆர்வம் கொண்ட சிங்கப்பூர் நபர் ஒருவர் பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சுமார் 20 மீட்டர் ஆழத்தில் மிதந்து கொண்டிருந்த பொழுது ஒரு காட்சி கண்ணில் பட்டது. அதாவது ஒரு மீனை மற்றொரு மீனை உண்ணும் காட்சியினை அவர் நேரில் கண்டார்.
தன்னை விட அளவில் பெரிய மீனை விழுங்கியதால் விழுங்க முடியாமல் சிரமப்பட்ட பொழுது தத்துரூபமாக படம் எடுத்து ‘மீனைத் தின்னும் மீன்’ என்ற தலைப்பிட்டு புகைப்பட கண்காட்சிக்கு அனுப்பினார். ஆண்டுதோறும் நடத்தப்படும் விருது வழங்கும் விழாவில் கடல் வாழ் உயிரனத்தை புகைப்படம் எடுத்த இவருக்கு முதல் பரிசு கிடைத்தது.அந்த தத்ரூபமான படம் தான் தற்பொழுது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.