TamilSaaga

சிங்கப்பூரின் பொருளாதார மந்த நிலையை மீட்டெடுத்த சுற்றுலாத்துறை… ஆறு மாதங்களுக்குப் பிறகு ஏற்றம் கண்ட உள்நாட்டு உற்பத்தி!

சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் மந்த நிலையை எட்டியதை அடுத்து மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி கண்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரில் உற்பத்தி துறையானது பலவீனமாக இருந்தாலும் சுற்றுலா துறையின் வளர்ச்சி காரணமாக பொருளாதார மேம்பட்டு உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரை ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.7% வளர்ச்சி அடைந்துள்ளது எனவும் இரண்டாவது காலாண்டில் இந்த விகிதமானது 0.5 விழுக்காட்டில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. தொற்றுநோய் பரவலின் காரணமாக உலக அளவில் பொருள்களின் தேவை குறைந்ததும் மற்றும் சீனாவின் பொருளியல் பின்னடைவும் இந்த மந்த நிலைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த உற்பத்தி பிரிவுகளை கணக்கிடும் பொழுது போக்குவரத்து பொறியியல் துறையை தவிர மற்ற அனைத்து பிரிவுகளும் சரிவு கண்டுள்ளன. அதேபோன்று கட்டுமான துறையை கணக்கில் கொள்ளும் பொழுது மூன்றாவது காலாண்டில் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஆறு விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் நோய் பரவலுக்கு பின்பு விமான துறை மற்றும் போக்குவரத்து துறை வளர்ச்சி கண்டதன் காரணமாக இந்நிறுவனங்களின் வளர்ச்சி நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்துள்ளது. மேலும் தங்கும் விடுதிகள் ஹோட்டல்கள் போன்ற அனைத்து துறையிலும் வெளிநாட்டு பயணிகளின் வரவு காரணமாக வலுவான வளர்ச்சி கண்டு உள்ளதால் நாட்டின் பொருளாதாரம் மீட்டெடுந்துள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts