TamilSaaga

சிங்கப்பூரில் சூப்பர் மார்கெட், மால்களில் உள்ள சிறிய கடைகளிலும் Safe entry Gateway

சிங்கப்பூரில் உள்ள பெரிய கடைகள், சூப்பர் மார்கெட் மற்றும் மால்களில் உள்ளிருக்கும் சிறிய கடைகளிலும் TraceTogether-only SafeEntry, SafeEntry Gateway பதிவு முறையானது மீண்டும் பின்பற்றப்படும் என அமைச்சுகளுக்கான பணிக்குழு அமைப்பு இன்று அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் சென்ற இடங்களின் உள்ளே இருக்கும் சிறிய கடைகளிலும் தொடர்பினை கண்டறியும் வகையில் இந்த பதிவு முறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 21 ஆம் தேதி முதல் இந்த பதிவு முறையை கட்டாயமாக செயல்படுத்த பெரிய கடைகளுக்கு உள்ளிருக்கும் சிறிய கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் Track together சாதனத்தை கொண்டு அவர்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

Related posts