சிங்கப்பூர் தன்னுடைய வடகிழக்கு கடலோர பகுதியில் உள்ள சுமார் 40 ஹெக்டேர் நிலப் பகுதிகளை மீட்பதற்காக திட்டமிட்டுள்ளது. இந்த 40 ஹெக்டேர் நிலப்பகுதி என்பது கிட்டத்தட்ட 60 கால்பந்தாட்ட மைதானங்களுக்கு சமமான பரப்பளவை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரின் வருங்கால நிலத்தேவைக்கு இந்த இடம் பயன்படும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த திட்டத்திற்கான செலவு வடிவமைப்பு, சுற்றுச்சூழல், மேலும் அதனால் ஏற்படக்கூடிய தாக்கம் ஆகியவற்றை பற்றி மதிப்பிட ஜேடிசி என்ற நிறுவனம் ஏல குத்தகைக்கு தற்பொழுது அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் மனிதனால் உருவாக்கப்படும் முதல் சதுப்பு நிலப் பகுதிக்கு அருகில் உள்ள இந்த இடம் கடலுக்குள்ளும் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி பலருக்கு துபாயில் உள்ள பாம் தீவை நினைவுபடுத்துவதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் முதற்கட்டம் Lorong Halus அணைகரைப் பகுதியில் இருந்து துவங்கப்படும் என்றும். அப்பகுதியில் இந்த திட்டம் நிறைவுபெற 7 ஆண்டுகள் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது.