TamilSaaga

வியப்பூட்டும் அழகிய சிற்பங்கள்!பிரம்மாணடமாக அயோத்தியில் உதயமாகும் புதிய ராமர் கோவில்! கும்பாபிஷேக தகவல்களும் சிறப்பம்சங்களும்.

உலக அரங்கில் மூன்றாவது பெரிய இந்து கோவிலாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்த கோயில்
அடுத்த ஆயிரம் வருடங்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படாதவாறு பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல வருடங்களாக சர்ச்சைகளையும் போராட்டங்களையும் கடந்து வந்த இந்தக் கோயில் தற்பொழுது பிரமாண்டமான முறையில் கும்பாபிஷேகத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது இந்தியாவின் இதயமாக இருக்கும் உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ஸ்ரீ ராமருக்காக கட்டப்பட்டு வரும் கோயில் பற்றிய வியப்பூட்டும் பல சிறப்பு அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

ராமாயண இதிகாசத்தின்படி திரேத யுக காலத்தில் பாரதத்தை ஆண்டது சூரிய குலத்தில் தோன்றிய அரசர்கள் அதில் தோன்றிய தசரத சக்கரவர்த்திக்கும் அன்னை கோசலைக்கும் பிறந்தவராக ஸ்ரீ ராமர் சொல்லப்படுகிறது. இவர் ஸ்ரீ விஷ்ணு பகவானின் ஏழாவது அவதாரமாகும். இந்த அவதார புருஷன் பிறந்த இடமான ராமஜென்ம பூமியாக சொல்லப்படும் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ஸ்ரீ ராமருக்கு பிரம்மாண்டமாக கோயில் கட்டப்பட்டு அது தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது

இந்தக் கோவில் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை நிர்வாகத்தால் 2020 ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாரதப் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொள்ள பூமி பூஜை நடத்தப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கியது

தற்போது இந்தக் கோவிலின் திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால் நடந்து வரும் சோபகிருது ஆண்டு தைமாதம் 8ஆம் தேதி வருகின்ற ஜனவரி மாதம் 22ஆம் தேதி திங்கட் கிழமை அன்று 12.30 மணிக்கு மாபெரும் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெறாவதாக கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நாடெங்கிலும் இருந்து சுமார் 3,000 மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொள்ளப் போவதாக ஒரு அறிவிப்பும் வந்துள்ளது

இந்த ஆலயம் நமது இந்திய பாரம்பரிய நாகர கட்டிடக்கலை நுணுக்கத்துடன் இரும்பு பயன்படுத்தாமல் கற்களைக் கொண்டு பழமை வாய்ந்த கோவில்களைப் போலவே உருவாக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் நீளம் சுமார் 392 அடி அகலம் 250 அடி உயரம் 167 அடி உடன் மூன்று தலங்களாக ஆலயம் அமைந்துள்ளது ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தை கொண்டுள்ளது இந்த ஆலயத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாசல்கள் உள்ளன தரைத்தளமான கர்ப்ப கிரகத்தில் பிரபு ஸ்ரீ ராமபிரானின் குழந்தை வடிவமும் முதல் தளத்தில் ஸ்ரீ ராமபிரானின் பட்டாபிஷேக மண்டபமும் அமைய உள்ளது.

கர்ப்ப கிரகத்தில் அமைக்கப்படும் குழந்தை வடிவிலான ராம் லல்லாவின் சிலை மீது சூரிய ஒளி படும் வகையில் கட்டப்பட்டுள்ளது
இந்த சிலை 51 இஞ்ச் உயரத்தில் 1.5 டன் எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. முழுவதும் கருப்பு நிற கல்லால் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பவர்களை எளிதில் கவர்ந்திழுக்கும் வகையில் சிலையை அழகாக வடித்துள்ளனர். தண்ணீர் மற்றும் பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்பொழுது எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் உருவாக்கியுள்ளனர்.

இந்த கோவிலின் மூலவர் சிலை கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சிற்பக் கலைஞர் அருண் யோகிராஜ் உடன் சேர்த்து மூன்று சிற்பிகளால் உருவாக்கப்படுள்ளது.

நாட்டிய மண்டபம் ரங்க மண்டபம் தரிசன மண்டபம் பிரார்த்தனை மண்டபம் கீர்த்தனை மண்டபம் என மொத்தமாக ஐந்து மண்டபங்கள் இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆலயத்தில் உள்ள ஒவ்வொரு தூண்களிலும் இறைவன் மற்றும் நாட்டிய மாந்தர்களின் சிலை மிகவும் தத்துரவமாகவும் அழகாகவும் வடிக்கப்பட்டுள்ளது.

பல ஆராய்சிக்கு பிறகு 1000 வருஷங்களுக்கு நீடித்து நிற்கும் கற்களை கொண்டு இந்த கோவில் கட்டப்படுடுள்ளது ராஜஸ்தானில் இருந்து மக்ரானா மார்பிள் மற்றும் இளஞ்சிவப்பு மணற்கல், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் இருந்து கிரானைட் கல், மத்திய பிரதேசத்தில் உள்ள மாண்ட்லாவில் இருந்து வண்ண பளிங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அஸ்திவாரத்தை அமைப்பதற்காக ‘ஸ்ரீ ராம்’ என்று பொறிக்கப்பட்ட செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து புனித நீரும், கற்களும்,மண்ணும் நெய்யும் அயோத்திக்கு வந்து சேர்ந்துள்ளன.

இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் இருந்து மண்ணை கொண்டு வந்து ராமர் கோயிலில் சேர்க்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது கும்பாபிஷேக நாளன்று பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆலயத்தின் நுழைவு வாயிலில் 32 படிகள் உள்ளன அதில் ஏறி பிரதான நுழைவாயிலை அடையலாம். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு லிப்ட் வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன

இந்த ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் கோட்டை சுவர்கள் சுமார் 732 மீட்டர் நீளத்துடனும் 4.25 மீட்டர் அகலத்துடனும் அமைக்கப்பட்டுள்ளன

கோட்டையின் நான்கு மூலைகளிலும் முறையே சூரியன் சிவன் கணபதி தேவி பகவதி ஆகியோருக்கான ஆலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன
கோட்டையின் தெற்கு முகமாக அனுமனும் வடக்கு முகத்தில் அன்னபூரணி ஆலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன ஆலயத்தின் தென்பகுதியில் பழமையான சீதை கிணறு உள்ளது

கோட்டையின் வெளியே
தென்திசையில் வால்மிகிமகரிஷி வசிஷ்ட மகரிஷி விசுவாமித்திர மகரிஷி அகஸ்திய மகரிஷி குகன் சபரி மாதா மற்றும் தேவி அகல்யாவிற்கான ஆலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன

தென்மேற்கில் குபேரன் குடிலில் உள்ள சிவாலய புனர் பிரதிஷ்டை மற்றும் ராம பக்த ஜடாயூவின் பிரதிஷ்டைகளும் உள்ளன

ராமாயண இதிகாசத்தில் ராமர் சந்திக்கும் அனைவரின் சிற்பங்களும் இங்கு வடிக்கப்பட்டு இராமாயண கதையை கண் முன்னே கொண்டு வரும் அளவிற்கு சிற்பங்கள் கோவிலின் உட்புறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன

இப்படி பல சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்ரீராமர் கோவில்
பல்லாயிரம் மக்களின் கனவாக இருந்த இந்த கோவில் தற்போது 1000 கோடிக்கும் அதிகமான செலவில் சுமார் 70 ஏக்கர் நிலபரப்பில் பிரமாண்டமான நிறுவப்பட்டுள்ளது இதில் 10 ஏக்கரில் கோயிலும், மீதமுள்ள இடத்தில் கோயில் வளாகமாகவும் கோவிலைச் சுற்றி பசுமையான தோற்றத்தை ஏற்படுத்தவும் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.

வாரணாசியை சேர்ந்த லக்‌ஷ்மி காந்த் தீக்‌ஷித் என்ற சாமியார் தான் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதன்மையான சடங்குகளை செய்யவுள்ளார். அம்ரித் மகோத்சவம் என்ற பெயரில் ஜனவரி 14ஆம் தேதியே இந்த திருவிழா தொடங்கிவிடும்.

குடமுழுக்கு நிகழ்வில் கலந்து கொள்ள இயலாதவர்கள் ஜனவரி 22 கும்பாபிஷேக நாளில் அனைவரது வீடுகளிலும் தீபம் ஏற்றுங்கள். தீபாவளியாக கொண்டாடுங்கள். ஊரிலுள்ள கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்துங்கள்.அன்னதானம் கொடுங்கள் என்று இவ்விழா நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related posts