TamilSaaga

சிங்கப்பூரை ‘அதிக ஆபத்து’ நாடுகளின் பட்டியலில் சேர்த்த “அடுத்த” நாடு : Digital Entry Registration கட்டாயம்

கடந்த செப்டம்பர் 8ம் தேதி முதல், சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி இடையே தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதை (VTL) செயல்பட்டு வருகின்றது. சில பயணிகளும் ஜெர்மனியில் இருந்து VTL மூலம் சிங்கப்பூர் வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முழு தடுப்பூசி போடப்பட்ட பயணிகளும் இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்ய தனிமைப்படுத்தல் அல்லது SHN அறிவிப்புகள் தேவையில்லை. அக்டோபர் 22 அன்று, ஜெர்மனியின் அரசின் சுகாதார நிறுவனமான ராபர்ட் கோச் நிறுவனம் (RKI) அக்டோபர் 24, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடங்கி, சிங்கப்பூரை “அதிக ஆபத்துள்ள” நாடாக வகைப்படுத்தப்படும் என்று அறிவித்தது.

ஜெர்மனியின் மத்திய சுகாதார அமைச்சகம், மத்திய வெளியுறவு அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை, கட்டிடம் மற்றும் சமூக அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு பகுப்பாய்வு மற்றும் முடிவெடுக்கும் செயல்முறை மூலம் ஆபத்து பகுதி என வகைப்படுத்தப்படுகிறது சிங்கப்பூர். பல்கேரியா, கேமரூன், குரோஷியா மற்றும் காங்கோ குடியரசு ஆகியவையும் சிங்கப்பூருடன் அக்டோபர் 22 அன்று அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இதற்கிடையில், ஹோண்டுராஸ், ஈராக், கென்யா மற்றும் கொசோவோ ஆகியவை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

சிங்கப்பூரில் உள்ள ஜெர்மன் தூதரகம் கூறுகையில் முழு தடுப்பூசி போடப்பட்ட தனிநபர்கள் தனிமைப்படுத்தலின்றி ஜெர்மனியில் நுழைய முடியும் என்று கூறியுள்ளது. இருப்பினும், அவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு ஆன்லைனில் எடுக்கப்பட்ட டிஜிட்டல் நுழைவு பதிவை முதலில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் பதிவு என்பது சோதனை முடிவுகள் அல்லது தனிமைப்படுத்தல், தடுப்பூசி அல்லது மீட்புக்கான ஆதாரம் மற்றும் நுழைவு விதிமுறைகளிலிருந்து ஏதேனும் விலக்குகளை சரிபார்ப்பதற்கு உதவுகிறது.

12 வயதிற்குட்பட்ட தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் ஜெர்மனியில் ஐந்து நாள் தனிமைப்படுத்தலுக்காக வீட்டில் தங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்றும் தூதரகம் மேலும் கூறியது.

Related posts