TamilSaaga

தமிழர்களின் வாழ்வோடு கலந்த பசுமாடு… சிங்கப்பூர் சாலையில் கொண்டு செல்லும் பொழுது பேசு பொருள் ஆகிய சம்பவம்!

நம் ஊர்களில் பசுமாடுகள் சாலையில் நடமாடுவதும், மாடுகளை லாரியில் வண்டியில் ஏற்றி செல்வதும் பொதுவான ஒன்றுதான்.சிறுவயதிலிருந்தே அதை நாம் பார்த்திருப்பதால் நமக்கு ஒன்றும் அது பெரிதாக தெரியாது ஆனால் சிங்கப்பூர் மக்களுக்கு இந்த செயல் புதிதான ஒன்றுதான். அதனால் தான் பசுமாட்டை சரக்கு லாரியில் ஏற்றிச் சென்ற சம்பவம் சிங்கப்பூரில் தற்பொழுது பேசுபொருள் ஆகியுள்ளது. சிங்கப்பூரில் உள்ள லிம் சூ காங்கில் விக்னேஷ் எனப்படும் பால்பண்ணைசெயல்பட்டு வருகின்றது. இந்த பால்பண்ணையில் பசுமாடுகள் ஏராளம் என்பதால் இந்துக்கள் சம்பந்தமான பூஜைகளுக்கும், கிரகப்பிரவேசம் போன்றவற்றிற்கும் பசுமாடுகள் இந்த பண்ணையில் இருந்து செல்வதுண்டு.

இந்த பண்ணையில் இருந்து கருப்பு வெள்ளை நிறம் கலந்திருந்த பசுமாட்டை விரைவுச் சாலையில் கொண்டு சென்ற பொழுது அதை வீடியோ எடுத்த ஒருவர் பேஸ்புக்கில் பதிவிட்டதை அடுத்து அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி அதைப்பற்றி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். லாரியில் பின்பக்கம் மூடாமல் இருப்பதால் அதைக் கண்டு பசு மாட்டிற்கு ஆபத்து விளைவிக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிலர் பசுமாட்டினை வண்டியில் ஏற்றி செல்வது சட்டப்படி சரியானதா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இது குறித்து பண்ணையின் உரிமையாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பசுமாட்டினை முறையாக கொண்டு செல்வதற்கு சிங்கப்பூரில் ஏதேனும் விதிமுறைகள் உள்ளதா? என்று விணவியுள்ளார். மேலும் பசுமாடு கோயிலுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், இதுவரை பலமுறை பல்வேறு விசேஷங்களுக்கு பசு மாடுகளை கொண்டு சென்றதாகவும் இதில் 50 வருடத்திற்கு மேலாக அனுபவம் உள்ளதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாது என்றும் உரிமையாளர் கூறினார்.

Related posts