TamilSaaga

தடுப்பூசி போட்டுக்கொண்டவரா நீங்கள்? உடற்பயிற்சியை ஒரு வாரத்துக்கு தள்ளி வையுங்கள் – சிங்கப்பூர் சுகாதார அமைச்சு

சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய பரிந்துரைகளை பற்றி சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் போதும் மக்கள் உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்களை ஒரு வாரத்துக்கு தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பேட் (Bat) மற்றும் பந்துகள் (Ball) கொண்டு விளையாடுதல், மெதுவாக ஓடுதல் மற்றும் பளு தூக்குதல் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளது.

30 வயதுக்கு கீழ் உள்ள மக்களுக்கு இந்த நடைமுறைகள் யாவும் பொருந்தும் என்று கூறப்பட்டது.

சாதாரணமாக வீட்டு வேலை செய்யுதல் நடப்பது போன்ற சுலபமான வேலைகள் செய்ய எந்த இடர்பாடும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

Related posts