ஜாதி, மதம், இனம், பணம் ஆகிய அனைத்தையும் கடந்த உறவு என்றால் அது மூன்றெழுத்து மேஜிக்கான ‘காதல்’ என்று சொல்லலாம். இதற்கு எடுத்துக்காட்டான ஒரு சம்பவம் தான் மலேசியாவில் அரங்கேறி இருக்கின்றது. மலேசியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகளான ஏஞ்சலின் தனது தந்தையின் 2500 கோடி சொத்தை உதறி தள்ளிவிட்டு காதலனை கரம் பிடித்துள்ளார். தற்பொழுது இவர்களைப் பற்றிய கதைதான் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
ஏஞ்சலின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தனது மேற்படிப்பினை மேற்கொண்டார். அதே வேளையில் அந்த பல்கலைக்கழகத்தில் படித்த ஜெடியா பிரான்சிஸ் என்பவர் அறிமுகமானார். இவர்களுக்கிடையேயான நட்பு காதலாக மலரவே, திருமணம் செய்து கொள்வதற்காக இரு வீட்டாரிடம் தகவல்கள் தெரிவித்தனர். பொதுவாகவே பணக்கார வீடு என்றால், அவர்களுக்கு பொருளாதாரத்தில் கீழே உள்ள குடும்பத்தாரிடம் சம்பந்தம் செய்து கொள்ள மறுப்பர். அதே கதை தான் ஏஞ்சலினுக்கும் ஏற்பட்டது. மலேசியாவின் பிரபல தொழிலதிபரின் குடும்பமானது இவர்களின் காதலை ஏற்க மறுத்தது.
ஆனால் ஏஞ்சலின் தனது காதலில் உறுதியாக இருந்தார். அதை மீறி திருமணம் செய்ய வேண்டுமானால் சொத்தில் ஏஞ்சல் எனக்கு உரிமை இல்லை என்றும் வீட்டை விட்டு வெளியேறலாம் என்றும் தெரிவிக்கவே, தனது காதலனா? சொத்தா? என்ற முடிவில் ஏஞ்சலின் காதலனை தேர்ந்தெடுத்தார். மனதுக்கு பிடித்த காதலனை மனம் உடைந்து தற்பொழுது சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில் ஏஞ்சலின் தந்தைக்கும் தாய்க்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அவர்களது விவகாரத்து வழக்கு தற்பொழுது நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இவர்களின் காதலுக்கு ஒன்றாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது அவர்களின் திருமண வாழ்வை கேள்விக்குறியாகி நீதிமன்றத்திற்கு வந்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.