TamilSaaga

“சிங்கப்பூரில் பெருந்தொற்று சிகிச்சை மையமாக மாறும் F1 Pit கட்டிடம்” : 700க்கும் அதிகமான படுக்கைகள் அமைப்பு

சிங்கப்பூரில் இந்த தொற்றுநோய்க்கு காலத்துக்கு முன்னர் சிங்கப்பூரின் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட Marina Bayவில் உள்ள F1 பிட் கட்டிடம், வரும் நவம்பர் 9 முதல் பெருந்தொற்று நோயாளிகளை அனுமதிக்க தொடங்கும் மேலும் இது COVID-19 சிகிச்சை வசதியாக மாற்றப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 721 படுக்கை வசதி கொண்ட இடமாகவும், குறிப்பாக வயதான நோயாளிகளுக்காக இது பிரத்தியேகமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தடுப்பூசி போடப்படாத மற்றும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது தடுப்பூசி போடப்பட்டவர்கள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் அடங்குவர். அவர்கள் பொதுவாக நன்றாக இருக்க வேண்டும் மற்றும் கழிவறைக்குச் செல்வது அல்லது உணவு உண்பது போன்ற அன்றாட நடவடிக்கைகளில் உதவி தேவையில்லாமல் சுதந்திரமாகவும் இருக்கும் உடல்தகுதியோடு இருக்க வேண்டும்.

“இந்த நோயாளிகளில் பெரும்பாலோர் நிலையானவர்கள், ஆனால் அவர்களுக்கு நிலையான நாள்பட்ட நோய்கள் இருக்கும்பட்சத்தில், உதாரணமாக, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு உள்ளிட்டவை இருக்கும் நிலையில், ஆனால் அவர்கள் 70 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருந்து பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளனர், என்றால் அவர்கள் இங்கு அனுமதிக்கப்படுவார்கள்” என்று மையத்தின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ஜோனாதன் ஓங் கூறினார்.

நோயாளிகள் மருத்துவமனைகளின் மதிப்பீட்டிற்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் 24 மணி நேரமும் மருத்துவ ஊழியர்களால் கண்காணிக்கப்படுவார்கள். அதன் படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் வயதான நோயாளிகளுக்கு கவனம் செலுத்துவதன் மூலம், இந்த வசதி பொது சுகாதார நிறுவனங்களின் பளுவை “குறைக்க” உதவும் என்று டாக்டர் ஓங் கூறினார்.

Related posts