TamilSaaga

சிங்கப்பூர் நண்பர்கள் தீபாவளியை கவனமாக் கொண்டாடுங்க… லிட்டில் இந்தியாவில் அனல் பறக்கும் கட்டுப்பாடுகள்…

சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியானது வார இறுதி நாட்களில் பொதுவாகவே கட்டும். இந்த தீபாவளியானது ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது என்றால் சொல்லவா வேண்டும். சிங்கப்பூரில் வாழும் அனைத்து தமிழர்களின் கூட்டமும் லிட்டில் இந்தியாவில் அலை மோதும் என்பதால் சிங்கப்பூர் அரசு நிபந்தனைகளை விதித்துள்ளது.

வாகனங்கள் லிட்டில் இந்தியாவின் வட்டார பகுதிகளுக்குள் செல்வதற்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபானங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 11ஆம் தேதி மாலை 4 மணியிலிருந்து மறுநாள் நவம்பர் 12ஆம் தேதி அதிகாலை 4:00 மணி வரை பள்ளிவாசலுக்கு முன்பாக இருக்கும் சாலைகளை கடக்கும் இடமானது மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேம்பல் லேனில் இருக்கும் சாலை கடக்கும் இடமும் மூடப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் மற்ற இடங்களில் கொண்டு வந்திருக்கும் மாற்றங்கள் குறித்து பொதுமக்களின் கவனத்திற்காக போர்டுகள் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் நவம்பர் 10ஆம் தேதி இரவு பத்தரை மணியிலிருந்து 14ஆம் தேதி காலை 7:00 மணி வரை மதுபானங்கள் குடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் குடித்தால் அங்கு கூடுகின்ற கூட்டங்கள் காரணமாக அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்பதற்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகளை பொதுமக்கள் மீறினால் முதல் கட்டமாக 1500 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், விதிமுறையை மீண்டும் மீண்டும் மீறுகின்ற பட்சத்தில் 3000 வெள்ளி வரை நான்கு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடிமக்களுக்கு மட்டுமல்லாது மதுபானங்கள் விற்கப்படும் கடையின் உரிமங்களும் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் விதிமுறைகளை பொறுத்தவரை மிகவும் சத்தங்கள் ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த வெடிபொருட்களை கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு அதிக சத்தம் ஏற்படுத்தும் வெடிபொருளை வெடிப்பவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் இந்த கட்டுப்பாடுகளை கவனமாக கருத்தில் கொண்டு தீபாவளியை கொண்டாட எங்களது வாழ்த்துக்கள்.

Related posts