TamilSaaga

“மலேசியன் ஏர்லைன்ஸ்.. 31,000 அடி உயரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு” : கதறி அழுத பயணிகள் – உண்மையில் அந்த விமானிகள் Great!

அண்டை நாடான மலேசியாவின் சபா கடலோர நகரமான தவாவுக்குச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் (MAS) விமானம், “தொழில்நுட்ப சிக்கல்கள்” மற்றும் மோசமான வானிலை காரணமாக கடந்த ஏப்ரல் 3ம் தேதியன்று கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு (KLIA) திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வருஷத்துல சாகப்போறேன்… அதுக்குள்ள என் பொண்டாட்டிக்கு நல்லது பண்ணிடனும் – ஏக்கத்துடன் சிங்கப்பூர் Hawker

நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (NST) அளித்த தகவலின்படி, விமானத்தில் பல்லாயிரம் அடி உயரத்தில் பயணித்துக்கொண்டிருந்த பல பயணிகள் தங்கள் இருக்கைகளில் இருந்து மேல் எழும்பி மிதந்துள்ளனர். சுமார் 31,000 அடியில் வானில் பறந்துகொண்டிருந்த அந்த போயிங் 737-800 விமானம் சுமார் 7,000 அடிக்கு சற்றென்று கீழ்நோக்கி விழுந்துள்ளது.

விமானம் புறப்பட்ட 30வது நிமிடத்தில் இந்த நிகழ்வு நடந்ததாகவும், Seat Belt சமிக்கை OFF செய்யப்பட்டிருந்ததால் பல பயணிகள் Seat Belt போடாமல் இருந்தால் பலர் தங்கள் இருக்கைகளிலேயே மிதந்தனர் என்றும் அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் பயத்தில் பல பயணிகள் பதறி அழுததாகவும் அவர் கூறினார். இறுதியில் விமானம் பின்னர் யு-டர்ன் செய்து, மலாக்காவிற்கு மேலே சில முறை வட்டமிட்டு, பின் KLIAக்கு திரும்பியது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வெளியிட்ட அறிக்கையில், “விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்ததாலும்,மோசமான வானிலை காரணமாகவும் KLக்கு விமானம் திரும்பிவிடப்பட்டதாகவும் MAS தெரிவித்தது.

“பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு” விமானிகள் KLக்குத் திரும்ப முடிவு செய்ததாக அது கூறியது. மாலை 5:03 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதை MAS உறுதிப்படுத்தியது. “எங்கள் பணியாளர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு மலேசியா ஏர்லைன்ஸுக்கு மிகவும் முக்கியமானது” என்று அது மேலும் கூறியது.

ஷங்கர் பட பிரம்மாண்டத்தை மிஞ்சிய சிங்கப்பூர் வாலிபரின் “Love Proposal” – இப்படியொரு காதலை எதிர்பார்க்காத காதலி – வியந்து நின்ற Marina Bay பகுதி மக்கள்

மேலும் உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்ட விமானிகளுக்கு, மக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். விமானத்தை இயக்குவது அதிலும் குறிப்பாக பயணிகள் விமானத்தை இயக்குவது என்பது உன்மையில் அசாதாரணமான விஷயம் என்று தான் கூறவேண்டும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts