இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு அமீரகத்தில் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கத்தை பார்க்காத நாடுகளே இல்லை எனலாம். பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் கொரோனாவிலிருந்து நாட்டை பாதுகாக்க ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பாதிப்பில் இருந்து நாட்டு மக்களை காத்திட பல்வேறு பொருளாதார இழப்புகளை சந்தித்தாலும் கூட சில துணிகரமான முடிவுகளை பலநாட்டு அரசாங்கங்கள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் பல நாடுகளில் பிற நாடுகளிலிருந்து வரும் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் பயணிகள் விமானத்தை வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை தடை செய்துள்ளதாக தேசிய விமான சேவையான எட்டிஹாட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
இதேபோல் கனடா அரசும், இந்தியாவில் இருந்து உள்வரும் பயணிகள் விமானங்களுக்கான தடையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.