TamilSaaga

நீங்க பார்க்கின்ற வேலை உங்க மனதையும் வாழ்வையும் எப்படி பாதிக்கிறது தெரியுமா? Work-Life balance பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

உங்கள் சுய வாழ்க்கையின் பல நேரங்களை நிர்ணயிப்பது உங்களது வேலை வாழ்க்கைதான் என்றால் நம்ப முடிகிறதா? ஆமா உங்க வேலை எப்படி எந்த அளவுக்கு நேர்த்தியா இருக்கு என்பதைப் பொறுத்து தான் உங்கள் Mental Well Being இருக்கு.

மனரீதியா ஒரு சரியான வாழ்க்கை வாழ உங்கள் வேலையும் சரியா இருக்க வேண்டியது அவசியம். தினம் தினம் நீங்க செய்யுற அதே வேலை உங்களை bore அடிக்க வைக்குதா, வெறுப்படைய வைக்குதா. அப்போ உங்க வேலை வாழ்க்கை சரியா இல்லைனு அர்த்தம். இங்க தான் நீங்க சில விஷயங்களை கவனிக்கணும். முக்கியமான சில மாற்றத்தைக் கொண்டு வரணும். அப்போ தான் உங்கள் வேலையும் உங்கள் வாழ்க்கையும் ஒரு சரியான பாதையில போகும்.

1. உங்கள் Work Life Balance-ஐ சரியாக அமைத்துக் கொள்ளுங்கள்
2. நீங்கள் வேலை செய்வதற்கு தகுந்த சூழ்நிலையைத் தேர்ந்தெடுங்கள்
3. உடன் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் உங்கள் பாஸ் போன்றவர்களிடம் சரியான நட்புணர்வுடன் பழகிடுங்கள்.
4. உங்கள் வாழ்க்கைக்கான திட்டங்களை இப்பொழுதிருந்தே தொடங்கிடுங்கள்.

1. Work Life Balance

வேலை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ அதற்க்கு நாம அடிமையாகிடறோம். கொஞ்சம் கொஞ்சமா அது நமது நேரங்களை ஆட்கொள்ளும். Deadline, Target என ஓடிக்கொண்டே நமக்கான நேரங்களை நாம மறந்துடறோம். அது தான் நம்மை புத்துணர்ச்சியா வைத்திருக்க உதவும். ஆனால் அதுவே இல்லை என்றால் உங்கள் மனம் இன்னும் சோர்வடையும்.

மத்திய உணவு நேரம், வேலைகளுக்கு நடுவே சிறிய இடைவேளை என வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நீங்க Realx பண்ணிக்கிட்டா தான் வேலையை சரிவர செய்ய இயலும். இல்லைனா அதுவே ஒரு Tension ஆ மாறிப்போகும். உதாரணத்துக்கு உங்க மத்திய உணவு நேரத்துல உங்க வேலைகளைப் பற்றி பேசாமலும், யோசிக்காமலும் relax ஆ இருங்க. ஒவ்வொரு 25 நிமிடங்களுக்கு ஒரு முறை 5 நிமிடம் break எடுங்க. இது உங்களின் Efficiency ஐ அதிகரிக்க உதவும்.

2. சூழ்நிலை

வேலை செய்ய ஒரு சிறந்த சூழல் இருந்தா தான் எல்லாரும் நிம்மதியா வேலை செய்ய முடியும். அலுவலகத்தில் உள்ள பணியாளர்களுடன் ஒரு நன்மதிப்பில் இருப்பதும் முக்கியம். அனைவருடனும் அமர்ந்துஹ் வேலை செய்வது உங்களுக்கு ஒரு சிறந்த அலுவலக சூழலை உருவாக்கித் தரும். ஒரு வேலை நீங்க வீட்டிலிருந்தே வேலை செய்யும் நபர் என்றால் உங்களுக்கான சிறந்த சூழலை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் இல்லத்தில் உள்ள பொருட்கள் வாசனை திரவியங்கள், இசை என சிறந்த வேலை சூழலை உருவாக்குவது உங்கள் பொறுப்பு.

மேலும் ஒரு முக்கியக் குறிப்பு வீட்டிலிருந்தே பணிபுரிவோர் உங்களுக்கான வேலை சூழல் மட்டுமல்லாமல் அதன் நேர மேலாண்மையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதன்படி சரியாக வேலை நேரங்களை தேர்வு செய்து உங்களின் வேலைகளை முடித்திட வேண்டும்.

3. Relationship With Surrounding People

மேலே குறிப்பிட்டது போல உங்களை சுற்றியுள்ள ஊழியர்கள், manager மற்றும் Boss போன்றோரிடம் நன்மதிப்புடன் இருக்க வேண்டும். ஒரு நல்ல உறவுடன் இருப்பது தான் உங்களுக்கான நன்மதிப்பை பெற்றுத் தரும். அவ்வப்பொழுது ஏற்படும் பிரச்னைகளுக்கு அப்பொழுதே பேசி ஒரு சுமூகமான தீர்வைக் கண்டடைய வேண்டும். ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அதனை நேரடியாக அமைதியான முறையில் பேசி தீர்வு காண்பது தான் நல்லது.

அதே போல உங்கள் manager மற்றும் boss இடம் உங்களுக்கு உள்ள பிரச்சனைகள், குறைக்கள் மற்றும் பரிந்துரைகளைக் குறித்து நேரடியாக கலந்தாலோசிக்க முயலுங்கள். அனைத்தையும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். பிரச்சனையான சூழல் தொடர்ந்து நீடித்தால் அது உங்களின் பணியை பாதிக்கக்கூடும்.

ஒருவேளை இது பயனளிக்கவில்லை என்றால் அப்பொழுது உங்கள் அடுத்த வேலையைத் தேட வேண்டிய காலம் வந்ததென நினைத்துக் கொள்ளுங்கள். குறைகளுடன் ஒரு இடத்தில் பணிபுரிவது உங்களுக்கான வேலை மன ரீதியான ஆரோக்கியம் போன்றவற்றை மிகவும் பாதிக்கும். அதற்க்கு வேறு வேலை தேடுவதே நல்லது.

4. Long Term Plan

நீங்கள் வேலை பார்க்கத் துவங்கிய காலம் முதலே உங்களின் பணி ஓய்வுக்கான திட்டங்களை வகுத்திடுங்கள். இது உங்களின் நிம்மதியான எதிர்காலத்தை உறுதி செய்ய உதவும். உங்களின் அமைதியான மற்றும் நிம்மதியான பணி ஓய்வு காலத்திற்க்காக இப்பொழுதிருந்தே சேமிப்பைத் தொடங்கிடுங்கள். இந்த உறுதி உங்களுக்கு மன நிறைவை உண்டாகும். பிறகு உங்களின் வேலை சூழலும் நிறைவாய்க் காணப்படும்.

அது மட்டுமல்லால் உடல் ரீதியாகவும் உறுதியுடன் இருக்க உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவதும் ஒரு விதமான மனா அமைதியைக் கொடுக்கக்கூடியதே!

எனவே உங்களின் எதிர்காலத்திற்கான திட்டங்களையும் வகுத்து வைத்தல், தற்பொழுது உங்களுக்கு மன நிம்மதியைக் கொடுக்கும்.

உங்கள் வேலை உங்கள் வாழ்க்கையின் பெரிய அங்கம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்! ஆனால் வேலை மட்டும் வாகை இல்லை என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts