TamilSaaga

சிங்கப்பூரில் நான்கு Dormitoryகளை தீவிரமாக கண்காணிக்கும் MOH : நேற்று மேலும் 630 பேருக்கு பாதிப்பு

சிங்கப்பூரில் நேற்று புதன்கிழமை (அக்டோபர் 6) நிலவரப்படு இரண்டாவது நாளாக 3,000-க்கும் மேற்பட்ட புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் இந்த பெருந்தொற்று வைரஸால் நாட்டில் மேலும் மூன்று பேர் இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 68 முதல் 102 வயதிற்குட்பட்ட மூன்று சிங்கப்பூர் பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்படவில்லை என்றும் மற்றும் பல்வேறு அடிப்படை மருத்துவ நிலைமைகளைக் கொண்டிருந்தனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

இதனையடுத்து சிங்கப்பூரில் வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது. புதன்கிழமை நண்பகல் நிலவரப்படி மொத்தம் 3,577 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது கடந்த செவ்வாய்க்கிழமை பதிவான 3,486 நோய்த்தொற்றுகளிலிருந்து அதிகரித்துள்ளது. புதிய வழக்குகளில், 3,562 உள்நாட்டில் பரவியுள்ளது. இதில் சமூகத்தில் 2,932 வழக்குகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர் விடுதிகளில் 630 வழக்குகள் உள்ளன. மேலும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 15 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என்று MOH நேற்று இரவு 11 மணிக்கு வெளியிட்ட ஊடக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி, சிங்கப்பூரில் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து இதுவரை நாட்டில் மொத்தம் 1,13,381 பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. MOH எட்டு செயலில் உள்ள கிளஸ்டர்களை “நெருக்கமாக கண்காணிப்பதாக” தெரிவித்துள்ளது. பட்டியலில் புதிய கொத்துகள் எதுவும் நேற்று சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ASPRI-Westlite Papan Dormitory, Tampines Dormitory, Jurong Penjuru Dormitory 1 மற்றும் 9 Defu South Street 1 Dormitory ஆகிய நான்கு தங்குமிடங்கள் கொத்துகளின் பட்டியலில் உள்ளன.

Related posts