தமிழ்நாட்டில் இன்று பட்டித் தொட்டி எங்கும் அனைவரும் விரும்பி பார்க்கும் சீரியல் என்றால் அது சன் டிவியில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் “எதிர்நீச்சல்” எனப்படும் சீரியல் ஆகும். அன்றாட குடும்பத்தில் நடக்கும், குடும்பத் தலைவிகளின் கஷ்டங்களை கூறுவதாலே இந்த சீரியல் மிகவும் பிரபலம் அடைந்தது. இந்த சீரியலுக்கு தன் நடிப்பின் மூலம் உயிர் கொடுத்து பிரபலம் அடைய வைத்த கதாபாத்திரம் ஆதி குணசேகரன் எனப்படும் கதாபாத்திரமாகும்.
இந்நிலையில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த திரு மாரிமுத்து என்பவர், சீரியலுக்காக டப்பிங் முடித்துவிட்டு வெளிவரும் பொழுது திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். பின்பு அவராகவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனைக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இந்நிலையில் இவரது மரணம் தமிழ்நாடு எங்கிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனியில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்த இவர் நடிகர், இயக்குனர் போன்ற பல முகங்களை கொண்டவர் ஆவார். பல வருடமாக இவர் சினிமாத்துறையில் இருந்தாலும் இந்த சீரியல்தான் இவரை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது. தனது தனிப்பட்ட வாழ்க்கையில் புகழை சம்பாதித்து கொடுத்ததும் இந்த சீரியல்தான் என்று பலமுறை கூறியுள்ளார். இந்நிலையில் இவரது திடீர் மரணம் தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்களுக்கு பெரும் இழப்பாகும்.