வருகின்ற ஜனவரி 2024 ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி உயரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் மின்சார கட்டணம் உயரும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் சராசரியாக ஒரு குடும்பத்திற்கு செலுத்தப்படும் மின்சார கட்டணமானது சுமார் 4 டாலர் என்ற அளவில் உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் மின்சார உற்பத்திக்காக வெளியேற்றப்படும் கரிம பொருள்களான கழிவுகளை வெளியேற்றுவதற்கு ஒரு டன் கழிவுக்கு ஐந்து டாலர் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் ஆனது 2024 ஆம் ஆண்டில் 25 டாலர் என உயர வாய்ப்புள்ளது. எனவே கரிம கழிவிற்கான கழிவுக்கான வரியை மின்சார உற்பத்தி நிறுவனங்கள் ஏற்கக்கூடிய நிலை உருவாகியுள்ளதால் அதற்கான கட்டணத்தை வசூலிக்கும் பொருட்டு மின்சார வரி உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மின்சார கட்டணம் ஒரு சதவீதம் உயரக்கூடும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே சிங்கப்பூரில் வாழும் குடும்பங்கள் இதற்கு ஏற்றவாறு தங்களது செலவினங்களை திட்டமிட்டு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.