Ultra Clean Technology உலகின் முன்னணி Semiconductor manufacturing நிறுவங்களுள் ஒன்று. Semiconductor-களுக்கான அனைத்து வேலைகளிலும் சிறந்து விளங்கக்கூடிய நிறுவனம். 1991-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பல நாடுகளில் இன்று வரை செயல்பட்டு வருகிறது. Semiconductor உருவாக்கம் செய்வதில் பன்னாட்டு நிறுவனமாக திகழும் இதில் 5000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். SemiConductor தவிர SemiConductor Equipment தொழிற்சாலை, Display manufacturing, மின்சார உற்பத்தி என பல தொழில்துறைகளில் வளர்ந்து வரும் நிறுவனம் ஆகும். தற்பொழுது Ultra Clean Technology தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பல வேலை வாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக சிங்கப்பூரில் அறிவிக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகளைக் குறித்த தகவல் தான் இந்த பதிவு!
தொடர்ந்து வளர்ந்து வரும் நிறுவனமான இதில் பணிபுரியும் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்துடன் உரிய வேலை வாய்ப்பு, பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடுகள் போன்ற அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படுகின்றன. தற்பொழுது இங்கு அறிவிக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகள்,
1) Customer Program Specialist II – இது Accounts மற்றும் Finance சார்ந்த வேலையாகும்.
நுழைவுத்தகுதி – Accounts மற்றும் Finance பிரிவில் ஏதேனும் ஒரு இளங்களைப் பட்டம். 3-5 வருடம் குறிப்பிட்ட துறையில் அனுபவம்.
2) Store Planner – உற்பத்தி தொழிற்சாலையின் store பிரிவில் பணிபுரிவதே இந்த வேலையாகும்.
நுழைவுத்தகுதி – Logistics பிரிவில் குறைந்தபட்ச கல்வித்தகுதி. உற்பத்தி தொழிற்சாலையில் இரண்டு வருட அனுபவமுள்ளோர் அல்லது கல்லூரிப்படிப்பை முடித்தவராக இருந்தாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
3) Customer Quality Engineer – Customer களிடம் இருந்து வரும் தரம் சார்ந்த புகார்களை கையாள்வதே இந்த வேலையின் முக்கிய பொறுப்பாகும்.
நுழைவுத்தகுதி – பொறியியல் பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம், குறிப்பிட்ட துறைகளில் 5 வருட முன் அனுபவம்.
4) SCM Project Manager – Material Margin பிரிவில் Supply Chain வேலைகளை கையாள்வதே இந்தப் பணியின் முக்கிய பொறுப்பாகும்.
நுழைவுத்தகுதி – Supply Chain Management-ல் ஏதேனும் ஒரு இளங்களைப் பட்டம். குறிப்பிட்ட துறையில் 10 வருடத்திற்கும் மேல் அனுபவம்.
5) Manager, Engineering – உற்பத்தி பொறியாளர்களையும், வேலைகளையும் மேலாண்மை செய்வதே இந்த பணியின் முக்கிய பொறுப்பாகும்.
நுழைவுத்தகுதி- குறிப்பிட்ட பொறியியல் துறையில் இளங்களைப் பட்டம். 7 வருடம் உற்பத்தி தொழிற்சாலையில் அனுபவம் (Manager பதவியில் இரண்டு ஆண்டுகள்)
6) Sr Manager Warehouse – Warehouse மற்றும் Logistics செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதே இந்த வேலையின் முக்கிய பொறுப்பாகும்.
நுழைவுத்தகுதி – குறிப்பிட்ட துறையில் Diploma அல்லது Degree மற்றும் 10 வருடங்களுக்கு மேல் அனுபவம்.
மேலே குறிப்பிட்ட அனைத்து வேலை வாய்ப்புகளும் UCT-ன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு வேலைக்கான அடிப்படைத் தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களை அறிந்துகொள்ள கொடுக்கப்பட்ட லிங்க்-கைப் பயன்படுத்தவும்.
உங்களுக்கான வேலையே தேர்ந்தெடுத்த பின் அதில் உள்ள அப்ளை என்ற பொத்தானைப் பயன்படுத்தி நேரடியாக விண்ணப்பிக்கலாம். அல்லது அருகிலேயே கொடுக்கப்பட்டுள்ள LinkedIn தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.