TamilSaaga

பத்தல, பத்தல சம்பளம் பத்தல! சிங்கப்பூர் ஊழியர்களின் மனக்குமுறல்!

எங்கேங்க சம்பளமே பத்தல! வேலைக்கு ஏற்ற சம்பளம் இல்லை! குறைவான சம்பளத்துக்கு தான் வேலை செய்யறேன் எங்க போய் எல்லாத்தையும் சமாளிக்கிறது! இது மாதிரியான புலம்பல்களை கேட்காதவர்கள் இருக்க முடியாது.  

வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்பது இங்கு பல ஊழியர்களின் கவலையாக இருந்துகொண்டே தான் இருக்கிறது. சிங்கப்பூரிலும் மக்கள் இதையே தான் சொல்கிறார்கள். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஏறத்தாழ 50 சதவிகித மக்கள் தங்களுக்கான ஊதியம் போதிய அளவில் இல்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர். 

People At Work 2024: A Global Workforce View அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆசியா பசிபிக் நாடுகளுள்  இதுதான் உயர்ந்த விகிதம் என கூறப்படுகிறது.

கலை மற்றும் கலாச்சாரத் துறையில் பணியாற்றும் சிங்கப்பூர் ஊழியர்கள் 67 சதவீதம் தங்களுக்கு குறைவான ஊதியம் கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். Professional Services industry-ல் 55 சதவீதம் மற்றும் Architecture, Engineering and Building industry-ல் 50 சதவிகிதம் என ஏராளமான மக்கள் தங்களுக்கான போதிய ஊதியம் இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர். 

ADP நிறுவனத்தின் ஆசியா பசிபிக் HR துணைத் தலைவர் யுவோன் டியோ கூறியதாவது, வேலைக்கேற்ற ஊதியம் இல்லை என்று ஊழியர்கள் பரவலாக கருத்து தெரிவிப்பது, பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை வரவழைக்கும். இது அவர்களின் வேலைத்திறனைப் பாதிக்கும், புதிய புதிய முன்னேற்றங்களை தடுக்கும், இது போன்ற சூழ்நிலைகள் நிறுவங்களுக்கு பின்னடைவைக் கொடுக்கும். மேலும் ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறும் சூழ்நிலைகள் ஏற்படக்கூடும். 

தொழில் நிறுவனங்கள் சில நேரங்களில் மாறிக்கொண்டே இருக்கும் தங்கள் ஊழியர்களின் எதிர்பார்ப்பை கவனிக்க மறக்கின்றன. இதுபோல் அல்லாமல் சற்று கவனமாக செயல்படவேண்டும். அப்பொழுது இது போன்ற திருப்தியின்மையை தவிர்க்கலாம். 

சம்பள உயர்வைப் பெற முடியாவிட்டால், ஒரு முறை வழங்கப்படும் போனஸ், கூடுதல் விடுமுறை மற்றும் மளிகை அல்லது ஷாப்பிங் வவுச்சர்கள் போன்ற பிற இழப்பீடுகளைப் பெறுவதில் ஊழியர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என மக்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டனர்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

 

Related posts