TamilSaaga

உலகின் சிறந்த Paramedical(Abbott) நிறுவனத்தில் தற்போது Engineer வேலைவாய்ப்பு! எப்படி விண்ணப்பிப்பது?

1888-ல் Wallace Calvin Abbott என்பவரால் உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் Abbott Laboratory. அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இந்த நிறுவனம் ஏறத்தாழ 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. Paramedical நிறுவனமான இது Pediasure, Ensure போன்ற பிரபலமான ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் பல மருத்துவ ஆய்வு உபகாரணங்களைக் கண்டறிந்து அதனை உலக அளவில் கொண்டு சேர்ப்பதில் 135 வருடங்களாக சிறந்து விளங்கி வருகிறது.

லட்சக்கணக்கான பணியாளர்களைக் கொண்டுள்ள இந்த பன்னாட்டு நிறுவனத்தில் தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

Energy Engineer எனப்படும் மின் பொறியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள், நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

https://www.jobs.abbott/us/en/job/31083827/Engineer-Energy?userId=er921k3lho4tv4tue92lqev38k&utm_source=phenom&utm_medium=email&utm_campaign=599578668966060a48803206-1717981204143-JTC+Jobs+Campaign&utm_term=er921k3lho4tv4tue92lqev38k

இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வேலைக்கு கீழ் apply now என்ற பொத்தானைக் க்ளிக் செய்து அங்கு கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கான பொறுப்புகள்:

1. மின்சாரம், நீர் போன்ற அடிப்படை ஆற்றல் வளங்கள் பயன்படுதப்படும் விதங்களைக் கண்காணித்து அதனை இயன்ற அளவில் சேமிக்க பரிந்துரைகள் செய்வது.
2. ஆற்றல் பயன்பாடு, அதற்கான செலவுகள் மற்றும் Conservation போன்றவற்றைக் கண்டறிய Energy Audit-களை மேற்கொள்வது
3. Energy modeling, measurement, verification, commissioning போன்றவற்றை மேற்கொண்டு ஆற்றல் சேமிப்புக்கான கூறுகளைக் கண்டறிவது, மற்றும் அதனை Document செய்வது போன்றவை இந்த வேலைக்கான முக்கிய பொறுப்புகள் ஆகும்.

பணிக்கான நுழைவுத்தகுதி:

  • Electrical, Control & Instrumentation, Chemical, Environmental பிரிவுகளில் பொறியியல் பட்டம் அல்லது 5 வருட அனுபவத்துடன் கூடிய டிப்ளமோ பட்டம்.
  • சிங்கப்பூரில் வழங்கப்பட்ட Energy Manager மற்றும் Water Efficiency manager போன்ற பயிற்சி சான்றிதழ்கள்.
  • 2 முதல் 3 வருடம் குறிப்பிட்ட துறையில் அனுபவம்

மேற்கண்ட அடிப்படைத் தகுதிகள் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த வேலையின் பொறுப்புகள் மற்றும் நுழைவுத்தகுதி குறித்து அறிய இதன் இணையப்பக்கத்தைப் பார்வையிடவும்.

உலகின் சிறந்த MNC நிறுவங்களுள் ஒன்றில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நிறுவன அதிகாரிகளால் நேர்காணலுக்காக அழைக்கப்படுவர். வேலைக்கு விண்ணப்பிக்கும் முன் வேலையின் பொறுப்புகள் குறித்து நன்கு அறிந்துகொண்டு விண்ணப்பிக்கவும்.

இது தவிர மேலும் பல வேலை வாய்ப்புகள் இந்த நிறுவனத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. https://www.jobs.abbott/us/en/home என்ற லிங்க்-கைக் க்ளிக் செய்து உங்களுக்கான மேலும் பல வேலைவாய்ப்புகளைப் பற்றி அறிந்துகொண்டு விண்ணப்பிக்கவும்

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க! 

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts