TamilSaaga

சிங்கப்பூர் MNC நிறுவனங்களில் ஏஜென்ட் உதவியில்லாமல் வேலையில் சேர முடியுமா? இந்த ஈஸியான method-ஐ try பண்ணுங்க

சிங்கப்பூர் : பொருளாதாரத்தில் உயர்ந்த நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் உள்ளது. இதனால் இங்கு MNC கம்பெனிகளும் அதிகம். சிங்கப்பூரில் கிட்டதட்ட 7000 க்கும் அதிகமான MNC கம்பெனிகள் உள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட கம்பயெனிகள் ஆசியாவை தலைமையிடமாக கொண்டவைகளாகும். சமீபத்தில் Monetary Authority of Singapore (MAS),வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின் படி 2024ம் ஆண்டில் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி 2.4 சதவீதம் என்ற அளவில் கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

சிங்கப்பூரின் டாப் 15 MNC கம்பெனிகளின் பட்டியல் :

  1. Trafigura
  2. DBS Group Holdings Ltd
  3. United Overseas Bank Limited
  4. Singapore Telecommunications Limited
  5. Sea Limited
  6. Wilmar International Limited
  7. Singapore Airlines Limited
  8. Grab Holdings Limited
  9. Keppel Ltd
  10. Singapore Technologies Engineering Ltd
  11. CapitaLand Ascendas REIT
  12. Genting Singapore Limited
  13. Jardine Cycle & Carriage Limited
  14. Singapore Exchange Ltd
  15. Sembcorp Industries Ltd

வழக்கமாக சிங்கப்பூரில் உள்ள MNC கம்பெனிகளில் வேலைக்கு சேர வேண்டும் என்றால் ஏஜன்ட்களின் உதவியுடன் தான் சேர முடியும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் போலியான ஏஜென்ட்களிடம் அதிக அளவில் பணம் செலுத்தி ஏமாந்து விடுவது உண்டு. சிங்கப்பூரில் வேலை வாங்கி தருகிறேன், S pass, work permit போன்றவற்றை வாங்கித் தருகிறேன் என பலரும் பல வழிகளில் ஏமாற்றி விடுவது உண்டு. இப்படி போலி ஏஜென்ட்களிடம் ஏமாறாமல், ஏஜென்ட்களின் உதவி இல்லாமல் சிங்கப்பூரில் உள்ள MNC கம்பெனிகளில் வேலைக்கு சேருவதற்கும் சில வழிகள் உள்ளன.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் ஒரு துறையில் வேலை பார்த்தவர்கள் வேறு துறைக்கு மாற முடியுமா? மாறினால் அதிக பணம் சம்பாதிக்க முடியுமா?

ஏஜென்ட் உதவி இல்லாமல் MNC கம்பெனியில் வேலை பெற வழிகள் :

  • மேலே கொடுக்கப்பட்டுள்ள டாப் 15 MNC கம்பெனிகள் தவிர இன்னும் பல MNC கம்பெனிகள் சிங்கப்பூரில் உள்ளன. இவற்றின் அதிகாப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அந்த கம்பெனி குறித்த விபரங்களை முதலில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
  • பிறகு அவர்களின் இணையதளத்தில் career என்ற உட்பிரிவிற்கு சென்று தேடிப் பாருங்கள்.
  • அதில் சமீபத்தில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஏதும் வெளியிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு, அவர்களின் இணையதளம் மூலமாகவே உங்களின் விண்ணப்பத்தை அளிக்கலாம்.
  • நீங்கள் விண்ணப்பம் செய்யும் போது அவர்களின் விதிமுறைகளை கவனமாக படித்து பார்த்து, அதில் கேட்கப்பட்டுள்ள உங்களை பற்றிய விபரங்களை எந்த வித தவறும் இல்லாமல் குறிப்பிட்டு அனுப்புங்கள்.
  • அவர்கள் எதிர்பார்க்கும் தகுதி உங்களிடம் இருந்தால் அவர்களிடம் இருந்து நேரடியாக உங்களுக்கு அழைப்பு வரும். இதனால் ஏஜென்ட்கள் யாரின் துணையும் இல்லாமல் நேரடியாக அந்த நிறுவனம் மூலமாகவே நீங்கள் பணியில் சேர்ந்து விட முடியும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts