மற்ற துறைகளை ஒப்பிடும்போது விமான போக்குவரத்து துறை மிகவும் சுவாரசியமான துறையாகும். ஆம், பலருக்கு விமான போக்குவரத்து துறையில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவு இருக்கிறது, அதற்கான தக்க தருணம் இதுவே. சிங்கப்பூரின் தற்காலிக போக்குவரத்து துறை அமைச்சர் chee Hong விமான போக்குவரத்து துறையை இன்னும் பெரிது படுத்துவதாக அதனுடைய குறைகளை நீக்கி வளர்ச்சி பாதையை நோக்கி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது என்று கூறுகிறார்.
சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் 2040 ஆம் ஆண்டுக்குள் ஆசிய பசிபிக் விமான பயணிகள் இன்னும் 2.5 பில்லியன் அதிகரிக்கும் என தெரிவித்து இருக்கிறது. இதனால் சிங்கப்பூரின் சங்கி விமான நிலையத்தை விரிவு படுத்த தேவையான பணிகளை மேற்கொண்டு வருகிறது என அவர் தெரிவித்து இருக்கிறார்.
இவ்வாறு விமான போக்குவரத்து தேவைகள் அதிகரிக்கும் போது சவால்களை விமான போக்குவரத்து துறை மேற்கொள்ள இருக்கிறது. முதலாவது ஹியூமன் வொர்க் போர்ஸ் (Human work force) தேவை அதிகரிக்கும். இரண்டாவது விமான போக்குவரத்து அதிகரிப்பதால் விமானங்களில் இருந்து வெளியேறும் கார்பன் புகையை கட்டுப்படுத்த வேண்டும். மற்றும் மூன்றாவதாக அண்டை நாடுகளில் இருக்கும் விமான போக்குவரத்து போட்டி.
இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள சிங்கப்பூர் போக்குவரத்து துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதில் முதலாவதாக குறிப்பிட்ட human work force -சை அதிகப்படுத்துவது அதாவது விமான போக்குவரத்து துறையில் புது வேலைகளை உருவாக்குவது, அல்லது ஏற்கனவே பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு மெருகேற்றப்படுவது என்பது போன்ற செயல்களில் கவனம் செலுத்தி வருகிறது. ஆம், இதன் காரணமாக சிங்கப்பூரின் விமான போக்குவரத்து துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
MOM அமைப்பின் அறிவிப்பின்படி இந்த 2024 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட நாலாயிரத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் விமான போக்குவரத்து துறையில் வர இருக்கிறது. நீங்கள் விமான போக்குவரத்து துறையில் வேலை செய்ய விருப்பம் உள்ளவராக இருந்தால் இதுவே சரியான தருணம் இந்த துறையில் நுழைவதற்கு. ஆம், தற்போது விமான துறை சார்பில் அறிவித்திருக்கும் விஷயங்கள், நீங்கள் ஏற்கனவே விமான போக்குவரத்து துறையில் பணி புரித்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய திறன்களை மேம்படுத்த நல்வாய்ப்பு அமைந்திருக்கிறது. அல்லது நீங்கள் வேறு துறைகளில் பணிபுரித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் தற்பொழுது விமான போக்குவரத்து துறையில் உங்களுக்கான வேலையை பெறலாம்.
விமான போக்குவரத்து துறை என்பதால் வான்வழி போக்குவரத்து சார்ந்த வேலைகள் மட்டுமல்லாமல், கீழே இருந்து செய்யும் வேலைகளும் இங்கே இருக்கிறது. அதாவது விமான நிலையங்களில் இருந்து பணிபுரிய பல வேலைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது சேல்ஸ் மேனேஜர், சாப்ட்வேர் இன்ஜினியர், ஆபரேஷனல் மேனேஜர், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் போன்ற விமான நிலையத்தில் இருந்து செய்யக்கூடிய வேலைகளும் நிறைய அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே விமான பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே வேலை பெற முடியும் என்பது இல்லை. யார் வேண்டுமானாலும் தங்களுடைய திறன்களை அதாவது விமான போக்குவரத்து துறைக்கான திறன்களை வளர்த்துக் கொண்டு வேலை பெற முடியும். சிங்கப்பூரின் மிகவும் முக்கியமான விமான சேவை நிறுவனங்கள் சங்கி விமான குழுமம் இன்னொன்று SATS குழுமம் ஆகிய நிறுவனங்கள் MyCareersFuture என்ற இணையதளத்தில் அறிவித்திருக்கிறது.
பொதுவாக சிங்கப்பூரில் இருக்கும் வேலை வாய்ப்புகளை பற்றி தெரிந்து கொள்ள MyCareersFuture இன்னும் இணையதளத்தை பலர் பயன்படுத்துகின்றனர். இதில் தற்போது என்ன என்ன வேலை என்னென்ன நிறுவனத்தில் இருக்கிறது என்பதை பற்றி விபரமாக தெரிந்து கொள்ளலாம்.
சிங்கப்பூரின் சங்கீ விமான நிறுவனம், ஒரு நற்செய்தி அறிவித்திருக்கிறது. குறுகிய காலகட்டத்திற்காக தற்போது வேலைகளை அறிவிக்கப்போவதில்லை, நிறுவனத்திற்கு தகுதியான ஆட்களை நீண்ட கால பணிகளாகவே தற்போது அறிவித்திருக்கும் வேலைகள் கருதப்படுகிறது. எனவே, ஜாப் செக்யூரிட்டி பற்றி கவலை கொள்ள தேவை இல்லை. மேலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, புதிய டெக்னாலஜி சார்ந்த தொழிலாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என நிறுவனம் அறிவித்திருக்கிறது. அது மட்டும் இன்றி ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், data analysis போன்ற துறைகளில் தகுதி வாய்ந்த தொழிலாளர்களை சங்கீ நிறுவனம் எடுக்க தயாராக உள்ளது.
SATs நிறுவனம் ஆட்சேர்ப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்தும் விதமாக நிதி சலுகையை அறிவித்திருக்கிறது. சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் frontline பதவிகளில் வேலைக்கு சேரும் பொழுது குறைந்தபட்சம் 5,000 SGD இன்சென்டிவாக அளிக்கப்படும் என அறிவித்திருக்கிறது. இதன் மூலம் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் தங்களுடைய கரியரை வளர்ச்சி பாதையை நோக்கி செலுத்தலாம்.
வேலை தேடுபவர்கள் அல்லது வேறொரு வேலையில் இருந்து விமான போக்குவரத்து துறையில் வேலைக்கு சேர நினைப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு பயனுள்ளதாக இருக்கும். தங்களுடைய திறன்களை upskill செய்து வேலைகளை எளிதாக பெற முடியும். ஆனால் தங்கள் செய்ய வேண்டிய விஷயம் உங்களுக்கு எது போன்ற திறன்களை மேம்படுத்துவதால் என்னென்ன வேலைகள் கிடைக்கும் என்பது போன்ற தகவல்களை CCP மூலம் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் செயல்பட வேண்டும்.
மேலும் இது குறித்து தகவல்களை பெறுவதற்கு career conversion program நடத்தப்படுகிறது. இதன் மூலம் உங்களுடைய சந்தேகங்களை கேட்டறிந்து விமான போக்குவரத்து துறையில் தடம் பதிக்க தயாராகுங்கள்!