Jabil என்பது உலக தரத்திலான உற்பத்தி நிறுவனமாகும். அமெரிக்காவின் புளோரிடா மாகானத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. Tampa Bay area பகுதியில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். Control Data Systems உற்பத்தி செய்வது, அவற்றில் பழுது ஏற்பட்டால் சரி செய்வது ஆகியவை இந்த நிறுவனத்தின் முக்கிய வேலைகள் ஆகும். Dell உள்ளிட்ட கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு இது உதிரி பாகங்களை தயாரித்து வழங்கி வந்தது.
சீனா, மலேசியா, இந்தியா, ஸ்பெயின், ரஷ்யா, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் Jabil நிறுவனத்திற்கு கிளைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் தற்போது administrative services, engineering, legal, business development group, information technology materials உள்ளிட்ட பல பிரிவுகளில் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வேலைக்கு apply செய்யும் முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Jabil நிறுவனத்தில் apply செய்யும் முறை :
- careers.jabil.com/en/ என்ற இணையதளத்திற்கு சென்று எந்த துறை சார்ந்த வேலை அல்லது எந்த நாடு என்பதை தேர்வு செய்து search jobs என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அந்த பக்கத்தில் உங்களுக்கான வேலை குறித்த பட்டியல் வெளியாகும்.
- ஒருவேலை நீங்கள் தேடும் துறையில் வேலை காலியாக இல்லை என்றால், உங்களின் இடது புறத்தில் தெரியும் கட்டங்களில் நீங்கள் வேலை பார்க்க விரும்பும் நாடு, பகுதி, location, உங்களுக்கான துறை, part time அல்லது full time, தற்காலிக வேலையா அல்லது நிரந்த வேலையா என்பது உள்ளிட்டவற்றை தேர்வு செய்து அதற்கு ஏற்றாற் போல் தேடலாம்.
- ஏதாவது ஒரு வேலையை கிளிக் செய்து உள்ளே சென்றால், அந்த வேலை குறித்த அனைத்து விபரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.
- அதில் கொடுக்கப்பட்ட விபரங்கள் உங்களின் தகுதிக்கு பொருத்தமாக இருந்தால் apply now என்பதை கிளிக் செய்யுங்கள்.
- அந்த பக்கத்தில் autofill with resume, apply manually, use my last application, apply with linkedin என நான்கு option கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது, நீங்கள் உங்களின் resume upload செய்தால் அதில் உள்ள விபரங்களை வைத்து தானாக உங்களை பற்றிய விபரங்களை பூர்த்தி செய்து கொள்ளும் அல்லது நீங்களாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். நீங்கள் ஏற்கனவே இந்த தளத்தில் விண்ணப்பம் செய்திருந்தால் அதையே பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது உங்களின் linkedin கணக்கை பயன்படுத்தியும் apply செய்யலாம்.
- பிறகு உங்களின் அனுபவம் உள்ளிட்ட உங்களை பற்றிய விபரங்கள் கேட்கப்படும் அவற்றை பூர்த்தி செய்து, apply கொடுத்து விட்டால் போதும்.